News April 19, 2024
ஜனநாயகக் கடமையாற்றிய சினிமா பிரபலங்கள்

இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் தேர்தலில், சினிமா பிரபலங்கள் பலரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றியுள்ளனர். இயக்குநர் ஷங்கர் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். இதேபோல், நடிகர் ஜெயம் ரவி, SV சேகர், இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் ஜனனி மற்றும் அதுல்யா ரவி உள்ளிட்ட பலரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினர்.
Similar News
News May 7, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (மே- 1) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News May 7, 2025
ஒவ்வொரு சிக்ஸும் ஆறு வீடுகளில் ஒளியேற்றும்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. மும்பை இந்தியன்ஸுடன் மோதும் இன்றைய ஆட்டத்தில் அடிக்கப்படும் ஒவ்வொரு சிக்ஸருக்கும், ஆறு வீடுகளில் சூரிய பேனல் மூலம் மின்சார இணைப்பு கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் அடித்தட்டு மக்களுக்கு உதவ முடியும், சுற்றுச்சூழல் காக்கவும் உதவலாம். ராஜஸ்தான் ராயல்ஸின் இந்த ‘பிங்க் ப்ராமிஸ்’ பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
News May 7, 2025
Fatty Liver பிரச்னையா… இதை ஃபாலோ பண்ணுங்க

கல்லீரலில் கொழுப்புத் திசுக்கள் படியும் Fatty Liver பாதிப்பு, தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கான மருத்துவ சிகிச்சைகள் இருக்கின்றன. எனினும், சில வழிமுறைகள் மூலம் ஆரம்ப நிலையில் அதை கட்டுப்படுத்தலாம்: *காலையில் வெறும் வயிற்றில் 2 ஆப்பிள் சாப்பிடலாம் *காபி குடிக்கலாம் *தினமும் குறைந்தபட்சம் 30 நிமிட உடற்பயிற்சி *வறுத்த, பதப்படுத்தப்பட்ட, ஜங்க் மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.