News March 19, 2024
நாளை முதல் வேட்புமனு தாக்கல்

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை காலை 11 மணிக்கு தமிழகத்தில் தொடங்குகிறது. முதற்கட்ட தேர்தலிலேயே தமிழகத்தின் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் நாளை முதலே தேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய 27 கடைசி நாளாகும்.
Similar News
News January 23, 2026
சற்றுமுன்: பெரும் அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்

பங்குச்சந்தைகள் இன்று பெரும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 769 புள்ளிகள் சரிந்து 81,537 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 241.25 புள்ளிகள் சரிந்து, 25,048 புள்ளிகளில் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர். HDFC Bank, Eternal, ICICI Bank, Adani Enterprises உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.
News January 23, 2026
திமுக ஆட்சியை அகற்ற கவுண்டவுன் ஸ்டார்ட்: மோடி

NDA பொதுக்கூட்டத்தில் `சகோதர, சகோதரிகளே வணக்கம்’ எனக்கூறி PM மோடி தனது உரையை தொடங்கினார். இங்கு அலைகடல் என மக்கள் திரண்டிருப்பதை பார்க்கும்போது, தமிழ்நாடு மாற்றத்துக்கு தயாராகிவிட்டது என்பதே, தேசத்திற்கே சொல்லும் செய்தியாக அமைந்துள்ளது. திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழக மக்கள் துடிக்கின்றனர் என்றும், ஊழல் நிறைந்த ஆட்சிக்கு கவுண்டவுன் தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
News January 23, 2026
ஆண்களே இந்த பேப்பரை இனி கையில் தொடாதீர்கள்!

ஷாப்பிங் மால், ATM என எங்கு சென்றாலும், பில் போட்டால், கையில் ஒரு சிறிய பேப்பர் தருவாங்க. இந்த குட்டி பேப்பர் ஆண்களுக்கு பெரிய டேஞ்சர் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த Thermal paper-ல் BPA (Bisphenol A) என்ற மிகவும் ஆபத்தான கெமிக்கல் உள்ளது. இது ஹார்மோன்களை சீர்குலைத்து பல உடல்நல பிரச்னைகளை உண்டாக்குமாம். இதனால் விந்தணு பாதிப்பும் ஏற்படலாம் என எச்சரிக்கப்படுகிறது. இனி கொஞ்சம் கவனமா இருங்க!


