News May 15, 2024
குறுகிய காலத்தில் லாபம் ஈட்ட எண்ணும் FII! – 2/2

அதாவது, நிகர குறுகிய நிலை ஒப்பந்தங்கள் (ஷார்ட் பொசிஷன் ) 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 2,13,224-ஐ எட்டியுள்ளது. பங்கு மதிப்பு குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில், ஒரு தரகரிடம் இருந்து கடன் வாங்கிய பங்குகளை மற்றொரு நபருக்கு விற்று, பின் அதே அளவு பங்குகளை மீண்டும் வாங்கி தரகரிடம் ஒப்படைப்பதே ஷார்ட் பொசிஷனாகும். இதே தந்திரத்தின் மூலம் FIIகள் லாபம் ஈட்டலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
Similar News
News November 12, 2025
ஜடேஜாவை நீக்குவது தோனியின் முடிவா?

CSK-வில் ஜடேஜாவை நீக்கி, சஞ்சு சாம்சனை கொண்டுவருவது தோனியின் முடிவாக இருக்கலாம் என Ex. இந்தியன் கிரிக்கெட்டர் முகமது கைஃப் கூறியுள்ளார். தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் சீசன் இதுவாக இருக்கலாம் என கூறிய அவர், சஞ்சு சாம்சனை உள்ளே கொண்டு வரும் தோனி அவரை அடுத்த கேப்டனாக்க பயிற்சி கொடுக்கலாம் எனவும் கூறினார். மேலும், சென்ற முறை ஜடேஜாவால் தலைமை பொறுப்பை சரியாக கையாள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
News November 12, 2025
நீங்க இந்த பழக்கங்கள் உடையவரா?

நீண்டகால ஆரோக்கியத்திற்கு நம் தினசரி செய்யும் சில பழக்க வழக்கங்களே பெரிதும் வழிவகுக்கும். அப்படி நாம் தினமும் செய்ய வேண்டிய முக்கிய பழக்கங்களை மேலே குறிப்பிட்டுள்ளோம். இவை மன அழுத்தத்தை குறைந்து, மனநிலையை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. அவை என்னென்ன என அறிய, போட்டோக்களை வலது பக்கம் Swipe செய்யுங்க. இவற்றில், எதை தினமும் செய்றீங்க?
News November 12, 2025
விஜய் கேட்கும் புதிய சின்னம் இதுவா?

சட்டமன்ற தேர்தலுக்கு வெற்றிக்கோப்பை சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் தவெக மனு அளித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்த சின்னத்துடன் சேர்த்து, ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில், உள்ளிட்ட சின்னங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில், ‘பிகில்’, ‘கில்லி’ ஆகிய படங்களை ரெபரென்ஸாக வைத்தே வெற்றிக்கோப்பை சின்னத்தை தவெக தரப்பு கோரியிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.


