News March 9, 2025

சிரியாவில் சண்டை தீவிரம்: 1,000க்கும் மேற்பட்டோர் பலி

image

சிரியாவில் அரசு படையினருக்கும், EX அதிபர் ஆசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே மீண்டும் சண்டை வெடித்துள்ளது. அசாத் ஆதரவாளர்களின் பகுதிக்குள் புகுந்து அரசு பாதுகாப்பு படைகள் 2 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அப்பாவி மக்கள் 750 பேர் உள்பட இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இடங்களில் மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News March 9, 2025

சனி கவனிக்க போகும் 3 ராசிகள்!

image

சனி பகவான் ஏப்ரல் 28ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இது, பல ராசிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தினாலும், ரிஷபம், சிம்மம், மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கு நன்மையை அள்ளிக் கொடுக்க போகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் அதிகரிக்கும். வருமானம் இரட்டிப்பாகும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

News March 9, 2025

எஸ்கேப் ஆயிட்டான் NZ

image

இந்தாண்டில் இதுவரை இந்திய அணி 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், இன்றைய போட்டி தவிர அனைத்திலுமே எதிரணியை ஆல்-அவுட் செய்து இந்திய அணி சாதனை நிகழ்த்தியுள்ளது. பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப், அக்‌ஷர், ஜடேஜா போன்ற பலம் வாய்ந்த பவுலர்களால் இது சாத்தியப்பட்டது. ஆனால், NZக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா ஆல்-அவுட் செய்யத் தவறிவிட்டது. NZ 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது குறிப்பிடத்தக்கது.

News March 9, 2025

உறவுக்கு மறுப்பு.. கொடூரமாக கொலை

image

செங்கல்பட்டு மாவட்டம் நல்லம்பாக்கத்தை சேர்ந்த சங்கரின் மனைவி செல்வராணிக்கும், குமரேசன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வந்ததால், குமரேசன் உடனான உறவை செல்வராணி துண்டித்துள்ளார். உறவுக்கு அழைத்தும் வரவில்லை. இந்நிலையில் நைசாக பேசி காட்டுக்குள் அழைத்துச் சென்று செல்வராணியை குமரேசன் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

error: Content is protected !!