News August 5, 2024

நம்பர் 1 இடத்தை பிடிக்க போராடுகிறேன்: டாப்ஸி

image

அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற இடத்தைப் பிடிப்பதற்காக, ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை என்று, நடிகை டாப்ஸி கூறியுள்ளார். இப்போது சம்பாதிப்பதை வைத்து தனது குடும்பத்தை திருப்தியாக நடத்த முடியும் எனக் கூறிய அவர், அதே நேரத்தில் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்க ஆசைப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். வெற்றிக்காக தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 5, 2026

தவெகவில் அதிரடி மாற்றம்.. விஜய் அறிவிப்பு

image

தவெகவில் மகளிருக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தும் வகையில் மாநில அளவிலான 11 நிர்வாகிகளை புதிதாக விஜய் நியமித்துள்ளார். அந்த வகையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஸ்பூர்த்தி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 10 இணை ஒருங்கிணைப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தவெகவின் மகளிர் படையின் செயல்பாடுகள் மற்ற கட்சிகளுக்கு சிம்ம சொப்பமானமாக விளங்குவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

News March 5, 2026

இந்தியா பைனலுக்கு செல்லாது: பாகிஸ்தான் வீரர்

image

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோற்கும் என பாக்., Ex வீரர் ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இங்கிலாந்து அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும் என அவர் கூறியுள்ளார். இத்தொடரில் இங்கிலாந்து அணி கடினமான சூழ்நிலைகளை கண்டுள்ளது என்றும், இந்தியாவை தோற்கடிக்க ஒரே ஒரு இங்கிலாந்து வீரர் சிறப்பாக செயல்பட்டாலே போதும் எனவும் அவர் கூறியுள்ளார்.

News March 5, 2026

தினமும் பாலியல் மிரட்டல் வருகிறது: ஆயிஷா கான்

image

தன் உடலை பற்றிய கமெண்ட்களே எப்போதும் வருவதால் ஒரு போஸ்ட் போடுவதற்கு கூட யோசிக்கிறேன் என நடிகை ஆயிஷா கான் தெரிவித்துள்ளார். ’துரந்தர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், தனக்கு ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக வேதனையுடன் கூறியுள்ளார். எந்த உடை அணிந்தாலும் தவறு என்கிறார்கள்; தான் உடுத்தும் உடையால் யாருக்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!