News August 5, 2025
காஷ்மீரில் வட்டமிடும் போர் விமானங்கள்.. என்ன நடக்கிறது?

இந்திய விமானப்படையின் போர் விமானங்களை நள்ளிரவு முதல் அடிக்கடி பார்க்க முடிவதாக காஷ்மீர் மக்கள் தெரிவித்துள்ளனர். இன்று அம்மாநிலம் 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட தினம் என்பதால் பாதுகாப்பு கருதி போர் விமானங்கள் குவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜம்மு & காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படலாம் என நேற்று முதல் செய்திகள் வருவதால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News August 5, 2025
10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30-40 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்றும் IMD எச்சரித்துள்ளது.
News August 5, 2025
சிவகார்த்திகேயனின் இந்த ஒரு ஆசை நிறைவேறுமா?

ஒரு படம் வெற்றி அடைந்த பிறகு, அதை 2ம் பாகமாக எடுத்து, அதில் நடிக்க தனக்கு எப்போதும் பயமாக இருக்கும் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஆனால், ‘மாவீரன்’ படத்தில் மட்டும் 2ம் பாகத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருப்பதாகவும், அப்படி ஒரு தனித்துவமான கதை அதில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார்.
News August 5, 2025
80% குணமாகும் கேன்சர் தடுப்பூசி இலவசம்!

கேன்சருக்கான தடுப்பூசியை மேம்படுத்தி வருவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கேன்சர் செல்களை கண்டறிந்து தேடி கொல்லும் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்திக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தடுப்பூசி மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. பரிசோதனையில் 75-80% வரை கேன்சர் குணமாவதாகவும், விரைவில் நாடு முழுக்க பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.