News December 4, 2024

இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்யும் வெந்தயம் தேநீர்

image

நீரிழிவு நோய்க்கு காரணமான ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்க செய்யும் ஆற்றலைக் கொண்டது வெந்தயம் தேநீர். வெந்தயத்தை இடித்து, சிட்டிகை மஞ்சள், சுக்கு, ஏலக்காய் தூள் ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான வெந்தயம் டீ ரெடி. இந்த டீயை வாரத்திற்கு 3 நாட்கள் குடிக்கலாமென ஆயுஷ் டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Similar News

News December 7, 2025

ஆவேசத்திற்கு தயாரான சூர்யா!

image

‘ஆவேஷம்’ ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பூஜையில் அவருடன் நாயகி நஸ்ரியா, மலையாள நடிகர் நஸ்லேன் போன்றோரும் கலந்து கொண்டனர். ‘சிங்கம்’ பட சீரிஸுக்கு பிறகு, இந்த படத்தில் மீண்டும் காக்கி உடையை சூர்யா அணியவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தை சூர்யாவே, ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

News December 7, 2025

என்னிடம் எந்த பாட்சாவும் பலிக்காது: CM ஸ்டாலின்

image

மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் பல திட்டங்களை அறிவித்த CM ஸ்டாலின், நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுவதாக பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார். அவர்கள் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், அவற்றை முறியடிப்போம் என்று சூளுரைத்தார். மேலும், ‘இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கிட்ட அவர்கள் பாட்சா எல்லாம் பலிக்காது. எதுவும் எடுபடாது’ என்றும் தெரிவித்தார்.

News December 7, 2025

உதிர்ந்த மலராக மாறிய ஸ்மிருதி – பலாஷ் காதல்

image

ஸ்மிருதி மந்தனாவுடனான காதல் உறவு முடிவுக்கு வந்ததாக இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் தெரிவித்துள்ளார். <<18495884>>ஏற்கெனவே திருமணம் நிறுத்தப்பட்டதாக<<>> ஸ்மிருதி பதிவிட்டிருந்த நிலையில், பலாஷும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். தனது வாழ்வில் மிகவும் கடினமான காலம் இது எனவும், உண்மையை அறியாமல் தவறான செய்திகளை பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!