News December 4, 2024
ஃபெஞ்சல் புயல், வெள்ள பலி 26ஆக உயர்வு

ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 12 பேரும், திருவண்ணாமலையில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருவரும் பலியாகியுள்ளனர். அதேபோல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான ஆடு, மாடுகளும் பலியாகியுள்ளன.
Similar News
News April 28, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 28) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News April 28, 2025
GT பவுலர்களை கதறவிடும் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால்

குஜராத்துக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. GT அணி வீரர்கள் எந்த பக்கம் பந்து வீசினாலும், RR அணியின் தொடக்க வீரர்களான குட்டி பையன் வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வாலும் சிக்சர், பவுண்டரியாக பறக்க விடுகின்றனர். முதல் 2 ஓவரில் 19 ரன்கள் எடுத்த அணி, 5 ஓவரில் 7 SIX, 7 FOUR உடன் 81 ரன்கள் குவித்தது.
News April 28, 2025
14 வயது வீரரின் அசத்தல் சாதனை

RR அணியின் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியிருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில், இதுதான் அதிவேக அரைசதமாகும். GT அணிக்கு எதிரான போட்டியில், அவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இதில், 6 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும். மிக இளம் வயதில் இந்த அசத்தல் சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கும் சூர்யவன்ஷி, இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்.