News December 6, 2024

ரயில் மோதியதில் பெண் SSI உடல் நசுங்கி பலி

image

வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷனில் இன்று காலை பெண் போலீஸ் ஒருவர் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார். விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி காந்திகுப்பம் போலீஸ் ஸ்டேஷனில் SSIஆக இருந்த ஸ்டெல்லா மேரி (50) என்பது தெரியவந்துள்ளது. ஏலகிரி எக்ஸ்பிரஸை பிடிக்க அவசரமாகச் சென்றபோது அவர் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. போலீசா இருந்தாலும் பொறுமை அவசியம்..

Similar News

News January 19, 2026

திவ்யா பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

image

பிக்பாஸ் தமிழ் 9-வது சீசனில், மகுடம் சூடிய திவ்யா கணேசனுக்கு டிராபி வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்ததற்காக அவருக்கு ரூ.50 லட்சம் மற்றும் மாருதி விக்டோரிஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த சீசனில் இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் என மொத்தம் 77 நாட்களுக்கு ரூ.23 லட்சத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. 2-வதாக சபரி, 3-வதாக விக்கல் விக்ரம், 4-வதாக அரோரா ஆகியோர் இடம்பிடித்தனர்.

News January 19, 2026

ஜனவரி 19: வரலாற்றில் இன்று

image

*1966 – இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். *1983 – நாஜி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டார். *2006 – புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது. * 1855 – ஜி.சுப்பிரமணிய ஐயர், தமிழக இதழியலாளர் பிறந்ததினம். *1990 – இந்திய மதகுரு ஓஷோ மரணம்.

News January 19, 2026

Cinema 360°: ₹11 கோடி வசூலித்த TTT

image

*ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ 3 நாள்களில் ₹11 கோடி வசூலித்துள்ளதாக தகவல் *சசிகுமார் நடித்துள்ள ‘மை லார்ட்’ டிரெய்லர் இன்று வெளியாகிறது *விக்ரம் பிரபுவின் சிறை ஜன.23-ல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது *ரவி மோகனின் BRO CODE படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்

error: Content is protected !!