News March 23, 2025
பெண் டாக்டர் சுட்டுக்கொலை!

பீகாரில் பெண் டாக்டர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் பாட்னாவில் உள்ள ஏசியா தனியார் ஹாஸ்பிடல் இயக்குநராக இருக்கும் ஷுர்பி ராஜை (35), மர்மநபர்கள் 6 பேர் சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர். நோயாளிகளை போல நடித்து அவர்கள் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Similar News
News March 25, 2025
புதிய வருமான வரி மசோதா மீது எப்போது விவாதம்?

மாத ஊதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிய வருமான வரி மசோதா மார்ச் 13ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம், வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
News March 25, 2025
‘துப்பாக்கி’ கொடுத்தவருடன் மோதும் ‘பராசக்தி’ ஹீரோ?

விஜய் அரசியலில் நுழைந்ததால் சினிமாவில் அவரது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துச் செல்லும் வகையில், கோட் படத்தில் ‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என்ற வசனம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது. விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன், பொங்கலை ஒட்டி 2026 ஜன.9-ல் வெளியாகிறது. அதே நேரத்தில், சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தையும் பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விஜய் உடனான மோதலை தவிர்ப்பாரா SK?
News March 25, 2025
மரண பயமா? ஹுசைனி பரிந்துரைத்த 3 புத்தகங்கள்!

எப்படிப்பட்ட வீரனும் மரணத்தைக் கண்டு பயப்படுவது உண்டு. ஆனால், கராத்தே வீரர் ஷிகான் ஹுசைனி, சாவை கண்டும் சிறிதும் அஞ்சாமல் இருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில், மரணத்தை துச்சமாக அவர் மதிக்க 3 புத்தகங்களே காரணம் என ஹுசைனி தனது கடைசி வீடியோவில் கூறுகிறார். DIE, அருண் செளரி எழுதிய PREPARING FOR DEATH, வேதியியலில் நோபல் பரிசு பெற்ற வெங்கி எழுதிய WHY WE DIE ஆகிய புத்தகங்கள்தான் அவை.