News March 1, 2025
பிப்ரவரி GST வரி வருவாய் ₹1.84 லட்சம் கோடி

கடந்த பிப்ரவரி மாதத்தில் GST வரி வருவாய் 9.1% அதிகரித்துள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், மத்திய GST ₹35,204 கோடி, மாநில GST ₹43,704 கோடி, ஒருங்கிணைந்த GST ₹90,870 கோடி மற்றும் கூடுதல் வரி ₹13,868 கோடி என மொத்தம் ₹1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் GST வரி வருவாய் 11% அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2025
யூடியூப் பார்த்து கொலை.. பலே இளைஞர் சிக்கியது எப்படி?

20 ஏக்கர் நிலத்திற்காக யூடியூப் பார்த்து பங்காளியை தீர்த்துக்கட்டிய பலே இளைஞர் 3 மாதங்களுக்கு பிறகு சிக்கியுள்ளார். கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டியை சேர்ந்த சக்திவேல், 3 மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் போலீசார் துப்பு கிடைக்காமல் திணறி வந்த நிலையில், உறவினர் சபரி, யூடியூப் பார்த்து 6 மாதங்களாக திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றியது அம்பலமாகியுள்ளது.
News March 3, 2025
கேப்டன் பதவி விலகல்: பட்லரின் உருக்கமான பதிவு!

இங்கி. கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளை அடுத்து, கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகினார். இது குறித்து உணர்ச்சிவசத்துடன் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘தலைமைத்துவ பொறுப்புகளிலிருந்து சோகத்துடன் விலகுகிறேன். விலக இதுவே சரியான நேரம். ஆதரவு தந்த அனைத்து வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும், என் மனைவி லூயிஸுக்கும் நன்றி. இவர்களே என் பயணத்தின் தூண்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
News March 3, 2025
தமிழக மீனவர்களும் இந்தியர்கள் தான்: முதல்வர்

தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக பார்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாகையில் நடந்த விழாவில் பேசிய அவர், கடந்த 10 வருடங்களில் இலங்கை கடற்படையால் 3,656 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என்றார். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும் எனவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மத்திய அரசு விளையாடக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.