News March 25, 2025
மரண பயமா? ஹுசைனி பரிந்துரைத்த 3 புத்தகங்கள்!

எப்படிப்பட்ட வீரனும் மரணத்தைக் கண்டு பயப்படுவது உண்டு. ஆனால், கராத்தே வீரர் ஷிகான் ஹுசைனி, சாவை கண்டும் சிறிதும் அஞ்சாமல் இருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில், மரணத்தை துச்சமாக அவர் மதிக்க 3 புத்தகங்களே காரணம் என ஹுசைனி தனது கடைசி வீடியோவில் கூறுகிறார். DIE, அருண் செளரி எழுதிய PREPARING FOR DEATH, வேதியியலில் நோபல் பரிசு பெற்ற வெங்கி எழுதிய WHY WE DIE ஆகிய புத்தகங்கள்தான் அவை.
Similar News
News September 18, 2025
GST 2.0: டிவிக்களின் விலை ₹70,000 வரை குறைகிறது

GST 2.0 எதிரொலியாக <<17745738>>கார், பைக் நிறுவனங்கள் <<>>வாகனங்களின் விலையை குறைத்த நிலையில், சோனி நிறுவனமும் பிரீமியம் டிவிக்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, 85 இன்ச் டிவிக்களின் விலை ₹70,000, 75 இன்ச் டிவி – ₹51,000, 65 இன்ச் டிவி 40,000, 55 இன்ச் டிவி – ₹32,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை குறைப்பு வரும் 22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 18, 2025
போலி பாகிஸ்தான் வீரர்களை திருப்பி அனுப்பிய ஜப்பான்

ஃபுட்பால் வீரர்கள் என்ற பெயரில் தங்கள் நாட்டிற்குள் நுழைய முயன்ற, 22 பாகிஸ்தானியர்களை ஜப்பான் திருப்பி அனுப்பியுள்ளது. வகாஸ் அலி என்பவர் போலியான ஃபுட்பால் கிளப் நடத்தி, அதன் மூலம் பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு, பாகிஸ்தானியர்களை ஜப்பானுக்கு அனுப்புவது தெரியவந்துள்ளது. இதை பாகிஸ்தான் விசாரணை அமைப்பும் உறுதி செய்துள்ளது. கடந்த 2024-லிலும், வாகாஸ் இதேபோல் 17 பேரை ஜப்பானுக்கு அனுப்பியுள்ளாராம்.
News September 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 462 ▶குறள்: தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். ▶பொருள்: தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.