News November 15, 2024
வாழைப்பழத்தை பார்த்தால் பயம்…தடை விதித்த அமைச்சர்

ஸ்வீடன் நாட்டின் அமைச்சர் பவுலினா பிராண்ட்பெர்க் தான் இருக்கும் இடங்களில் வாழைப்பழம் இருக்கக் கூடாது எனக் கட்டுப்பாடு விதித்துள்ளார். இவர் வித்தியாசமானவர். BananaPhobia என்ற இந்த பயம் வாழைப்பழத்தின் வாசனையோ, அதன் தோற்றமோ இவருக்கு Anxiety, குமட்டல் போன்ற பாதிப்புகளை கொடுக்குமாம். இந்த Phobia விசித்திரமானது என்றாலும், வல்லுநர்கள் இது குழந்தை பருவத்திலேயே உருவாகி இருக்கலாம் என்கிறார்கள்.
Similar News
News March 21, 2026
கூட்டணி: வேதனையுடன் திருமா முடிவை அறிவித்தார்

தவாக, CPM-ஐ தொடர்ந்து, திருமாவும் திமுக மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பேஸ்புக் நேரலையில் பேசிய திருமா, திமுக கூட்டணியில் சொற்ப தொகுதிகள் தான் கிடைப்பதாக வெளிப்படையாக வேதனையை தெரிவித்துள்ளார். கட்சியினர் சீட் கேட்டு தன்னை நெருக்கடிக்கு உள்ளாக்குகிற நிலை தொடர்வதாகவும், கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெறுவோம் எனவும் உறுதிப்பட அறிவித்துள்ளார்.
News March 21, 2026
துரைமுருகனுக்கு இனி அமைச்சர் பதவி கிடையாதா?

வயோதிகம் & உடல்நிலையை கருத்தில்கொண்டு அமைச்சர் துரைமுருகனை தேர்தலிலிருந்து விலக்க திமுக முடிவு செய்ததாக கூறப்பட்டது. இதனிடையே, உதயநிதியை துரைமுருகன் சந்தித்த நிலையில், இந்த முறை மட்டும் கடைசியாக அவருக்கு சீட் கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், திமுக ஆட்சி மீண்டும் அமைந்தால் துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாது என்ற முடிவிலும் கட்சித் தலைமை உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News March 21, 2026
ரம்ஜான் பிரியாணி சாப்ட்டீங்களா?

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர். இன்றைய தினம், இஸ்லாமிய தோழர்கள் தங்களது வீடுகளில் கறி பிரியாணி சமைத்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். அனைத்து மதத்தினரும் இணைந்து வாழும் நமது நாட்டில் ரம்ஜான் ஸ்பெஷல் பிரியாணி எல்லோருக்குமே ஃபேவரைட்தான். உங்கள் இஸ்லாமிய நண்பர் உங்களுக்கு பிரியாணி கொடுத்தாரா? உரிமையா கேட்டு வாங்குங்க.


