News January 24, 2025
FATTY LIVER அறிகுறிகள் இவைதான்: அலட்சியம்

ஒருகாலத்தில் அரிதாக இருந்த கொழுப்பு கல்லீரல் எனப்படும் FATTY LIVER, இப்போது 20-இல் 5 பேருக்கு வந்துவிட்டது. இதனை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இதனை சில அறிகுறிகள் மூலமாக கண்டறியலாம். 1) காரணமே இல்லாமல் எப்போதுமே உடல் சோர்வாக உணர்தல். 2) கால்களில் வீக்கம். 3) எடை தொடர்ந்து அதிகரிப்பு. 4) கண்களில் மஞ்சள் நிறம் 5) முகத்தில் அதிகப்படியான சதை 6) வலது பக்க வயிற்றில் வலி.
Similar News
News November 20, 2025
நடிகை சோனம் கபூர் மீண்டும் கர்ப்பம் (PHOTOS)

நடிகை சோனம் கபூர் தான் மீண்டும் கர்ப்பமடைந்ததை போட்டோ ஷூட் நடத்தி மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். பிங்க் நிற ஆடையில், கூலிங் கிளாஸுடன் கூலாக போஸ் கொடுத்த அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் அகுஜாவை 2018-ல் திருமண செய்த நடிகை சோனம் கபூருக்கு 2022-ல் அழகான ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. சோனம் கபூரை நாமும் வாழ்த்தலாமே!
News November 20, 2025
படத்தின் பெயரை கட்சிக்கு வைத்தாரா மல்லை சத்யா?

தான் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு ’திராவிட வெற்றிக் கழகம்’ என பெயர் வைத்துள்ளார் மல்லை சத்யா. இந்த பெயரை எங்கோ கேட்டதுபோல இருக்கிறதே என சற்று ரீவைண்ட் செய்து பார்த்தபோது ஒன்று புலப்பட்டது. சமீபத்தில் பிக்பாஸ் அபிராமி ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். கொடியை டிகோட் செய்த நெட்டிசன்கள், ‘இதையா 15 நாள்களாக குழு அமைத்து முடிவு செய்தார்’ என கமெண்ட் அடிக்கின்றனர்.
News November 20, 2025
கொளுத்தி போட்ட சசி தரூர்.. காங்கிரஸில் சலசலப்பு

PM மோடியின் பொருளாதார, கலாச்சார சிந்தனைகளை காங்கிரஸ் MP சசிதரூர் சமீபத்தில் பாராட்டி இருந்தார். இது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளை விட, இன்னொரு கட்சியின் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுகிறது என நினைத்தால், அவர் ஏன் பாஜகவில் சேரக்கூடாது என காங்கிரஸ் MP சந்தீப் தீக்ஷித் கேள்வியெழுப்பியுள்ளார்.


