News October 6, 2025
Fatty Liver பிரச்னையா… இதை ஃபாலோ பண்ணுங்க

கல்லீரலில் கொழுப்புத் திசுக்கள் படியும் Fatty Liver பாதிப்பு, தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கான மருத்துவ சிகிச்சைகள் இருக்கின்றன. எனினும், சில வழிமுறைகள் மூலம் ஆரம்ப நிலையில் அதை கட்டுப்படுத்தலாம்: *காலையில் வெறும் வயிற்றில் 2 ஆப்பிள் சாப்பிடலாம் *காபி குடிக்கலாம் *தினமும் குறைந்தபட்சம் 30 நிமிட உடற்பயிற்சி *வறுத்த, பதப்படுத்தப்பட்ட, ஜங்க் மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
Similar News
News October 6, 2025
இன்று பாஜக மையக்குழு கூட்டம்

சென்னை கமலாலயத்தில் இன்று மதியம் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார், தமிழக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, இணை பொறுப்பாளர் முரளிதர் மோஹல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தகுதியான வேட்பாளர்களை அடையாளம் காணுவது, கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது, தேர்தல் பணியை தீவிரப்படுத்துவது, கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக செல்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன.
News October 6, 2025
காலாண்டு விடுமுறை.. கடைசி நேரத்தில் பறந்த உத்தரவு

காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. முதல் நாளான இன்றே மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாடநூல்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மதிப்பீடு செய்யப்பட்ட மாணவர்களின் காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை விநியோகிக்க வேண்டும். பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
News October 6, 2025
காலையில் சாப்பிட வேண்டிய முதல் உணவு எது தெரியுமா?

காலை உணவு நமது உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமானது. காலையில் வெறும் வயிற்றில் டீ, காபி அல்லது திடமான உணவுகளை உட்கொள்வதால் காலப்போக்கில், வாயு பிரச்னை, செரிமான பிரச்னை, அசிடிட்டி போன்ற பிரச்னைகள் வரலாம். இதனால், காலையில் சியா விதைகள் போட்ட தண்ணீர், பப்பாளி பழம், ஆப்பிள், வெதுவெதுப்பான நீர், கஞ்சி, நட்ஸ் இவற்றை உட்கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.