News September 29, 2024
தந்தையின் உறுதி தாத்தாவின் உழைப்பு உள்ளது

துணை முதல்வர் உதயநிதியிடம், ஸ்டாலினின் உறுதியும், கருணாநிதியின் உழைப்பும் இருப்பதாக EVKS.இளங்கோவன் தெரிவித்துள்ளார். அமைச்சரான ஓராண்டில் சென்னை மாநகரில் ஃபார்முலா 4 கார் ரேஸை நடத்தி காட்டியவர் என்ற பெருமையை கொண்டவர் உதயநிதி என புகழாரம் சூட்டிய அவர், அவருக்கு தனது வாழ்த்துகளையும் கூறினார். மேலும், திமுக கூட்டணி முன்பைவிட வலுவாக உள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.
Similar News
News August 9, 2025
தனுஷ் உடன் காதலா?.. மிருணாள் தாகூர் விளக்கம்

2 நாள்களாக சோஷியல் மீடியாவை திறந்தாலே தனுஷ் – மிருணாள் காதல் விவகாரம்தான் முன்னால் வந்து நிற்கிறது. இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், மிருணாள் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், தனுஷ் தனக்கு நல்ல நண்பர் மட்டுமே என்றும், தங்களை பற்றிய வதந்தி குறித்து தெரிந்தபோது சிரிப்புதான் வந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வளவுதான் பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு!
News August 9, 2025
ATM-ல் பணம் போட்டாலும் கட்டணம், எடுத்தாலும் கட்டணம்

மாதாந்தர மினிமம் பேலன்ஸை <<17350157>>₹50,000-ஆக<<>> உயர்த்திய ICICI வங்கி, ATM கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. ICICI ATM-களில் முதல் 3 வித்டிராயல் இலவசம். அதன்பின், ஒவ்வொரு முறையும் ₹23 கட்டணம் விதிக்கப்படும். ICICI கிளைகள் & ATM-களில் பணம் டெபாசிட் செய்யவும் முதல் 3 முறை மட்டும் இலவசம். அதன்பின், ஒவ்வொரு முறையும் ₹150 (அ) ஒவ்வொரு ₹1,000-க்கும் ₹3.5 வீதம்- இதில் எது அதிகமோ, அத்தொகை கட்டணமாக விதிக்கப்படும்.
News August 9, 2025
‘மரணம் அமைதியை கொடுக்கட்டும்’.. விபரீத முடிவு

‘நான் இந்த உலகத்திற்காக படைக்கப்படவில்லை. இனி என்னால் இங்கு இருக்க முடியாது. வாழ்க்கையில் நான் காணாத அமைதியை மரணம் கொடுக்கட்டும்’. மேற்குவங்க PhD மாணவன் அனாமித்ரா ராய்(25) தற்கொலைக்கு முன் சோஷியல் மீடியாவில் பதிவிட்ட வரிகள் இவை. ராகிங் புகார் குறித்து காலேஜ் நிர்வாகத்திடம் கூறியும் பயனில்லை என்பதால் விபரீத முடிவை கையில் எடுத்துள்ளார். அவரது உடலை மீட்ட போலீஸ் விசாரித்து வருகிறது. SO SAD.