News April 25, 2025
அப்பாடா.. சொந்த மண்ணுல ஜெயிச்சிட்டோம்!

இதுதான் RCB ரசிகர்களோட தற்போதைய ரியாக்ஷன். வெளி மைதானங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற அந்த அணிக்கு, சொந்த மைதானமான பெங்களூருவில் வெற்றி கிடைக்காமல் இருந்தது. அந்த குறையை தீர்த்து வைத்திருக்கிறது RR அணி. சொந்த மண்ணில் முதல் 3 போட்டிகளில் தோற்ற RCB, நேற்றைய போட்டியில் வாகை சூடியுள்ளது. ஒட்டுமொத்தமாக 9 போட்டிகளில் விளையாடிய RCB, 6 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது.
Similar News
News November 10, 2025
பாமக அலுவலகத்தில் குவிந்த போலீஸ்.. பதற்றம்

சென்னை, தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்திற்கு மர்மநபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில், அது புரளி என தெரியவந்தது. அதேபோல், மலேசியாவில் இருந்து சென்னை வந்திருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அதுவும் புரளி என தெரியவந்தது.
News November 10, 2025
5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்காரணமாக தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
News November 10, 2025
காலையில் எழுந்ததும் இதை மட்டும் செய்யாதீங்க!

உணவு, வேலை என மாறி வரும் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப, நமது உடலை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில், நீங்கள் காலையில் எழுந்ததும் செய்யும் 5 விஷயங்கள் உங்கள் நாளை வெகுவாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி, டாக்டர் பிரகாஷ் மூர்த்தி, காலையில் எழுந்ததும் செய்யக்கூடாத 5 விஷயங்களை பட்டியலிட்டுள்ளார். அதை மேலே தொகுத்துள்ளோம். Swipe செய்து தெரிஞ்சுக்கோங்க.


