News June 27, 2024

வளர்ப்பு நாய் கடித்து தந்தை, மகன் பலி

image

ஆந்திராவைச் சேர்ந்த நரசிங்கராவ் (59) மற்றும் அவரது மகன் பார்கவ்வை (27) கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டில் வளர்த்த நாய் கடித்துள்ளது. ஆனால் இருவரும் எத்தகைய சிகிச்சையும் எடுக்கவில்லை. சம்பவம் நடந்த 2ஆவது நாள் நாய் இறக்கவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இருவரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்களது மூளை மற்றும் கல்லீரலை ரேபிஸ் வைரஸ் தாக்கியதால் இருவரும் உயிரிழந்தனர்.

Similar News

News March 14, 2026

காச்சிகுடா – தூத்துக்குடிக்கு ஏப்ரல் 6 முதல் விரைவு ரயில்

image

காச்சிகுடா – தூத்துக்குடி இடையே புதிய விரைவு ரயில் ஏப்.6 முதல் இயங்கும். சிறப்பு ரயில் (07191/07192) நிரந்தரமாகி, தூத்துக்குடி வரை நீட்டிப்பு. காச்சிகுடா திங்கள் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய் இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடி வரும். தூத்துக்குடியில் புதன் காலை 7.40 க்கு புறப்பட்டு வியாழன் மதியம் 1.25 காச்சிகுடா வந்தடையும். (வாரம் ஒருமுறை) இதனால தென் தமிழக – தெலங்கானா பயணம் எளிதாகும்.

News March 14, 2026

அரசியல் துரோகிக்கு பாடம் புகட்டப்படும்: OPS

image

அந்த நபர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் கிடையாது என்று EPS-யின் பெயரை குறிப்பிடாமல் OPS விமர்சித்துள்ளார். முதலமைச்சர் என்ற நிலைக்கு கொண்டு நிறுத்தியவரை (சசிகலா), அந்த நபர் (EPS) எந்த அளவிற்கு மரியாதை குறைவாக நடத்தினார் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்; அரசியலில் மிகப்பெரிய துரோகியான அந்த நபருக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்தார்.

News March 14, 2026

BREAKING: விலை ₹25,000 குறைந்தது

image

கார், பைக் வாங்க காத்திருப்போருக்கு இம்மாதம் பெரிய திருவிழா தான். காரணம், EV கார்கள் முதற்கொண்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. TATA, Maruti Suzuki உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் இந்த சலுகை திருவிழாவில் இணைந்துள்ளன. அவை எந்தெந்த கார், பைக்குகள், எவ்வளவு விலை குறைந்துள்ளது என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக SWIPE செய்து பாருங்கள். உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!