News April 18, 2025
இந்திய ஆஞ்சியோபிளாஸ்டி தந்தை காலமானார்

இந்திய ஆஞ்சியோபிளாஸ்டியின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் மாத்யூ சாமுவேல் களரிக்கல் (70) காலமானார். சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கேரள மாநிலம், கோட்டயத்தில் பிறந்த அவர், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்று விளங்கினார். அவரது திறமையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை 2000ம் ஆண்டில் வழங்கி கவுரவித்தது.
Similar News
News April 19, 2025
பிரபல அயர்லாந்து நடிகை காலமானார்

பிரபல Eurovision லெஜண்டும், பாடகியும், டிவி நடிகையுமான Clodagh Rodgers (78) காலமானார். 3 ஆண்டுகளாக உடல்நிலை பாதித்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், Clodagh Rodgers காலமானதாக அவரின் மகன் சாம் சோர்பி பதிவிட்டுள்ளார். கம் பேக், சேக் மீ, குட் நைட் உள்ளிட்ட பல்வேறு வெற்றி பாடல்களை Clodagh Rodgers பாடியுள்ளார். மகன் பிறந்ததும், பாடல் தொழிலில் இருந்து அவர் விலகிக் கொண்டார். RIP.
News April 19, 2025
நடிகைக்கு தீவிர உடல்நலக் குறைவு

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தோற்றத்தை மாற்றியதாக பரவிய தகவல் வதந்தி என நடிகை பவித்ரா லட்சுமி விளக்கம் அளித்துள்ளார். தீவிர உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அதன் காரணமாகவே தனது தோற்றம் மாறியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பவித்ரா சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், உடல் மெலிந்து, ஆள் அடையாளமே தெரியாதவாறு தோற்றம் மாறியிருந்தது.
News April 19, 2025
GTஐ வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் பட்லர்

DC அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி வரும் ஜோஸ் பட்லர், அவரது GT அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறார். 204 என்ற கடினமான இலக்கை துரத்திச் செல்லும் GT அணியின் கேப்டன் சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், ஜோஸ் பட்லர் 42 பந்துகளில் 77 ரன்களை விளாசியுள்ளார். குறிப்பாக, 15ஆவது ஓவரின் முதல் 5 பந்துகளிலும் அவர் பவுண்டரி அடித்து அசர வைத்தார்.