News March 11, 2025

மறுமணம் செய்ய தடையாக இருந்த மகனை கொன்ற தந்தை!

image

76 வயதில் மறுமணம் செய்யத் தடையாக இருந்த மகனை தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. குஜராத்தின் ராஜ்கோட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்த ராம் போரிச்சா, தனிமை காரணமாக மறுமணம் செய்ய நினைத்துள்ளார். ஆனால், அவரது மகன் ஜெய்தீப் (52), “திருமண வயதில் பேரன் இருக்கும்போது உனக்கு எதற்குக் கல்யாணம்” எனக் கேட்டதால் ஆத்திரமடைந்த போரிச்சா இந்த செயலை செய்துள்ளார். இதில் யாரை குற்றம் சொல்வது?

Similar News

News March 12, 2025

டெல்லியில் புதிய சேவை அறிமுகம்

image

டெல்லியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், படகு சவாரி அறிமுகம் செய்யும் திட்டம் கையெழுத்தாகியுள்ளது. முதற்கட்டமாக சோனியா விகார் – ஜகத்பூர் இடையே 4 கி.மீ. தூரத்துக்கு இந்த சேவை தொடங்கப்படுகிறது. மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை இது கொடுக்கும் என டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா தெரிவித்துள்ளார். அதேபோல் டெல்லிக்கு படகு சவாரி புதிய அடையாளத்தை கொடுக்கும் என முதல்வர் ரேகா குப்தா கூறியுள்ளார்.

News March 12, 2025

ரூ.5 கோடி எம்மாத்திரம்…ரூ.18 கோடி கொடுங்கள்: சுப்பராயன்

image

நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.18 கோடியாக உயர்த்த வேண்டும் என சிபிஐ MP சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.3 கோடி தொகுதி மேம்பாட்டு நிதி வழங்குவதாகவும், ஆனால் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதிக்கு வெறும் ரூ.5 கோடி நிதி வழங்குவது போதாது எனவும் கூறியுள்ளார். மத்திய அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News March 12, 2025

நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல: பரபரப்பு புகார்

image

பிரபல நடிகை சௌந்தர்யா 2004இல் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், 21 ஆண்டுகளுக்குப்பின், செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அது கொலை என்று ஆந்திராவை சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். நிலப் பிரச்னையில் இக்கொலை நடந்திருக்கலாம் என்றும், இக்கொலைக்கும் நடிகர் மோகன் பாபுவுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அரசு அதிகாரிகளிடம் அவர் புகாரளித்துள்ளார்.

error: Content is protected !!