News September 13, 2024

நீதிமன்றத்தில் அப்பாவு ஆஜர்

image

அவதூறு வழக்கு விசாரணைக்காக சபாநாயகர் அப்பாவு, சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக அப்பாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதன் வழக்கு விசாரணையில் ஆஜராகும்படி, அப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Similar News

News November 1, 2025

லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

வங்கிகளில் லோன் வாங்கியவர்களுக்கு நவம்பரில் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அக்டோபரில் இந்தியன் வங்கி, IDBI வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதங்களை 0.05% வரை குறைத்துள்ளன. அதனால், அந்த வங்கிகளில் வீடு, வாகன கடன் பெற்றவர்களின் EMI இந்த மாதம் முதல் குறைந்துள்ளது. இது சிறிய தொகை என்றாலும், நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு பயனளிக்கும். SHARE IT.

News November 1, 2025

ரோஹித்தின் உலக சாதனையை முந்திய பாபர் அசாம்!

image

T20 போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மாவின் சாதனையை பாகிஸ்தானின் பாபர் அசாம் முறியடித்துள்ளார். பாபர் அசாம் தற்போது T20-யில் 4,234 ரன்கள் அடித்துள்ளார். ரோஹித் 4,231 ரன்களுடன் 2-வது இடத்திலும், விராட் கோலி 4,188 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். 2024 T20 உலகக்கோப்பை தொடருடன் ரோஹித் & கோலி ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2025

நவ.1 ஏன் ‘தமிழ்நாடு நாள்’ அல்ல என்று தெரியுமா?

image

நவ.1 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் ஜூலை 18-ஐ தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடும். ஏன் தெரியுமா? என்ன தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும், 1967, ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு என பெயர் சூட்டும் வரை அது சென்னை மாகாணமாகவே இருந்தது. எனவே தான், அண்ணா தமிழ்நாடு என பெயர்சூட்டிய ஜூலை 18, தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டு, அதுவே தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

error: Content is protected !!