News March 25, 2025
கோர விபத்து.. நடிகர் மனைவி படுகாயம்

பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மனைவி சோனாலி சாலை விபத்தில் படுகாயமடைந்தார். மும்பை- நாக்பூர் நெடுஞ்சாலையில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்த முழு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தாலும், கொரோனா காலத்தில் மக்களுக்கு நல உதவிகளை செய்த ஹீரோ சோனுவின் குடும்பத்திற்கா இப்படி என ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News March 28, 2025
இயக்குநர் அவதாரம் எடுத்த ஹிர்த்திக் ரோஷன்

இந்திய சூப்பர் ஹீரோக்கள் படவரிசையில் ‘க்ரிஷ்’ படத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘க்ரிஷ் 3’ வெளியாகி 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், க்ரிஷ் 4ல் நடிப்பதோடு அப்படத்தை இயக்கவும் ஹ்ரித்திக் ரோஷன் திட்டமிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரது தந்தை வெளியிட்டுள்ளார். இதனால் உற்சாகமடைந்த ஹிர்த்திக் ரோஷன் ரசிகர்கள் ‘க்ரிஷ் 4’ என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
News March 28, 2025
மோடியின் அசத்தலான AI புகைப்படங்கள்!

CHATGPT-இன் GHIBLY STYLE AI ஃபோட்டோ தான் நியூ டிரெண்டிங். என்ன மாதிரியான புகைப்படங்கள் வேண்டுமானாலும், அதை டைப் செய்தாலே நாம் எதிர்பார்த்ததை விட சூப்பரான ஃபோட்டோக்களை அடுக்கி விடுகிறது CHATGPT. இந்நிலையில், மோடியின் லேட்டஸ்ட் சம்பவங்களை, அழகிய இமேஜ்களாக அது தொகுத்துள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்கு மோடி வந்தது; பிரதமராக பதவியேற்றது; மாலத்தீவுக்கு சென்றது போன்ற ஃபோட்டோக்கள் இதில் உள்ளன. SWIPE PLS.
News March 28, 2025
சனிப் பெயர்ச்சியால் பணம் கொட்டப் போகும் ராசிகள்!

சனிப் பெயர்ச்சி நாளை நடைபெறுவதால், 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதாம். 1) ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். திடீர் லாபம் கிடைக்கும். 2) மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி அடையும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. 3) துலாம் ராசிக்காரர்களுக்கும் வேலையில் முன்னேற்றம் ஏற்படலாம். வாழ்வில் நேர்மறையான மாற்றம் ஏற்படும் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர்.