News March 20, 2024
ஃபாஸ்டிங் இருந்தால் மாரடைப்பு ஏற்படலாம்

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இருந்தால் மாரடைப்பு ஏற்படலாம் என அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அதிர்ச்சிகரத் தகவலை வெளியிட்டுள்ளது. அதன் ஆய்வறிக்கையில், “16 மணிநேரம் வரை உண்ணாவிரதம் இருந்து விட்டு 8 மணிநேரத்துக்கு மட்டும் சாப்பிடுபவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். இம்முறையை பின்பற்றுவோருக்கு 91% இதயநோய்கள் உண்டாகும். அத்துடன் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 1, 2025
பெற்றோர்களே, இதை கவனிங்க!

வீடுகள், பள்ளிகளுக்கு வெளியே இயற்கை சூழல்களில் குழந்தைகள் விளையாடுவது, அவர்களின் உடல் & மனநலத்துக்கு பெரும் நன்மை செய்வதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வில் உறுதியாகியுள்ளது. `வெளியே’ என்பது கட்டடத்துக்கு வெளியே என்பதல்ல. மரம், செடிகள் மற்றும் இயற்கை தன்மை மிகுந்த இடங்களாக இருக்க வேண்டும் என்கின்றனர். ஆகவே, எப்போதும் ஸ்மார்ட்போனுடன் தலை கவிழ்ந்திருக்கும் நம் குழந்தைகளின் நிலையை மாற்ற வேண்டும்.
News November 1, 2025
சினிமாவில் பெண்களின் நிறம் பார்ப்பார்கள்: சம்யுக்தா

திருமணமாகி குழந்தைகள் இருக்கும் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தால், அது வேலைக்கு ஆகாது என்பார்கள் என்று சம்யுக்தா கூறியுள்ளார். சினிமாவில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே அரிது என்ற அவர், நிறம் பார்ப்பார்கள், திருமணம் ஆகிவிட்டதா என்றும் கேட்பார்கள் என தெரிவித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மதராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
News November 1, 2025
அற்ப அரசியல் லாபத்திற்காக பேசும் PM மோடி: சீமான்

தமிழகத்தில் பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற PM மோடியின் பேச்சு, தமிழர்களின் மீதான வன்மத்தின் வெளிப்பாடு என்று சீமான் விமர்சித்துள்ளார். திமுகவினர் பிஹார் மக்களை துன்புறுத்துவதாக மோடி கூறியதற்கு, திமுக கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அற்ப அரசியல் லாபத்திற்காக தமிழர்கள் மீது வரலாற்று பெரும் பழியை மோடி சுமத்தியுள்ளதாக சீமான் சாடியுள்ளார்.


