News March 27, 2025
அதிவேக அரைசதம்… பொளந்து கட்டிய பூரன்!

SRH அணிக்கு எதிரான போட்டியில் சிக்சர், பவுண்டரி என பறக்கவிட்ட LSG வீரர் பூரன், 18 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். இதன்மூலம், இந்த சீசனில் அதிவேக அரைசதமடித்தவர் என்ன சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார். 26 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்த அவர், கம்மின்ஸ் ஓவரில் அவுட் ஆனார். வெல்லப் போவது யார்? உங்கள் கணிப்பு என்ன?
Similar News
News November 14, 2025
முன்னிலை வகிக்கும் பாஜகவின் ஸ்டார் வேட்பாளர்கள்

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் ஸ்டார் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். ➤தாராபூர் தொகுதி: DCM சாம்ராட் சவுத்ரி முன்னிலை ➤அலிநகர் தொகுதி: பாடகி மைதிலி தாக்குர் முன்னிலை ➤லக்கிசராய் தொகுதி: DCM விஜய் குமார் சின்ஹா முன்னிலை ➤கதிஹார் தொகுதி: முன்னாள் துணை முதலமைச்சரும், பாஜக வேட்பாளருமான தர்கிஷோர் பிரசாத் முன்னிலை வகித்து வருகிறார்.
News November 14, 2025
தபால் வாக்குகள்… அமலுக்கு வந்த புதிய நடைமுறை

தற்போதுள்ள முறையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். ஆனால், அதன் முடிவுகள் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, கடைசி சுற்று முடிந்தபின் தான் அறிவிக்கப்படும். ஆனால், பிஹார் தேர்தலில் நடைமுறைக்கு வந்த புதிய நடைமுறையில், கடைசி இரண்டு சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கடைசி நேரத்தில் ஏற்படும் சர்ச்சையை தவிர்க்க இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
News November 14, 2025
அதிக இடங்களில் பாஜக முன்னிலை

ஆளும் NDA கூட்டணி, ஆட்சியை தக்கவைக்க தேவையான 122 இடங்களை விட கூடுதல் இடங்களில்(126) தற்போது முன்னிலை பெற்றுள்ளது. BJP-67, JDU-49, LJP(RV)-3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அதேபோல், இந்தியா கூட்டணி 84 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதில், RJD-66, CONG-10, CPL(ML)-5 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.


