News May 2, 2024

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

image

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை, வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், மா, பப்பாளி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹1 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும், மாம்பழங்களுக்கு கிலோவுக்கு ₹50 கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News November 16, 2025

அயோத்தி ராமர் கோயிலுக்கு CM ஸ்டாலின் போவாரா?

image

அயோத்தி ராமர் கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, 150 அடி உயர துவஜஸ்தம்பம் நிறுவப்பட உள்ளது. வரும் 25-ம் தேதி நடைபெறும் இந்த விழாவில் PM மோடி பங்கேற்கிறார். அனைத்து மாநில CM-களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட உள்ளது. CM ஸ்டாலின் போவாரா (அ) கடவுள் பக்தி கொண்ட தனது மனைவியை அனுப்பி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு CM செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News November 16, 2025

தீவிரமடைந்த புயல் சின்னம்.. கனமழை பொளந்து கட்டும்

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

News November 16, 2025

தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மைகளா!

image

மாறிவரும் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப, நமது உடல்நலப் பிரச்னைகளும் மாறிவருகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தை பேண, நமது உணவு முறைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அந்தவகையில், உடல் நலத்தை மேம்படுத்தும் உணவு வகைகளை நாம் தொடர்ந்து வழங்கி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, இன்று பீட்ரூட்டின் நன்மைகளை தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.

error: Content is protected !!