News October 25, 2024
கடலூரில் 29ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் மனுக்கள் பெற உள்ளார். இதில் தங்களது கோரிக்கை குறித்து பேச உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News January 18, 2026
கடலூர்: பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

நெல்லிக்குப்பத்தை எடுத்து பண்ணை குச்சிபாளையத்தை சேர்ந்தவர் ஜனனம்(60).
இவர் கடந்த 2ஆம் தேதி மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த பைக் மோதி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News January 18, 2026
கடலூர்: மனைவி திட்டியதால் கணவர் தற்கொலை

காடாம்புலியூர் அடுத்த கீழ் மாம்பட்டை சேர்ந்தவர் தொழிலாளி வெங்கடேசன்(45). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் அவரது மனைவி சாந்தி(30) வெங்கடேசனை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த வெங்கடேசன் நேற்று தனது வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 18, 2026
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.17) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.18) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


