News March 24, 2025

மே முதல் வாரத்தில் இருந்து ‘உழவரை தேடி‘ திட்டம்!

image

‘உழவரை தேடி’ வேளாண் நலத்துறை திட்டம் மே மாதத்தில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 17,116 வருவாய் கிராமங்களிலும் ஓராண்டுக்குள் திட்டம் அமலாகவுள்ளது. இத்திட்டத்தின்படி, அனைத்துத் துறைகளின் அதிகாரிகள் கொண்ட குழு, விவசாயிகளை சந்தித்து பயிர் பாதுகாப்பு, சாகுபடி, மகசூல் குறித்து விளக்கமளிக்கும். மாதம் 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் இதற்கான முகாம் நடக்கும்.

Similar News

News November 22, 2025

மயிலாடுதுறை மாவட்ட மக்கள் கவனத்திற்கு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்று (22.11.2025) சனிக்கிழமை மற்றும் நாளை (23 11 2025) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வாக்காளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து விரைந்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

127 கிலோ தங்கத்தை கடத்திய தமிழ் பட நடிகை!

image

தமிழில் விக்ரம் பிரபுவின் ‘வாகா’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரன்யா ராவ். இவர், கடந்த மார்ச் மாதம் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் DRI, ரன்யா ராவ் உள்பட 4 பேர் மீது 2,200 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதில், அவர் மொத்தமாக 127 கிலோ தங்கத்தை கடத்திய அதிர்ச்சி தகவலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

News November 22, 2025

வெள்ளி விலை ₹3,000 உயர்ந்தது

image

கடந்த 2 நாள்களாக குறைந்து வந்த வெள்ளியின் விலை இன்று(நவ.22) கிலோவுக்கு ₹3,000 அதிகரித்துள்ளது. கிராம் ₹172-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,72,000-க்கும் விற்பனையாகிறது. இந்த வாரத்தின் தொடக்க வர்த்தகத்தில்(நவ.17) கிலோ ₹1,73,000-க்கு விற்பனையான வெள்ளி வார இறுதி நாளான இன்று ₹1,000 குறைந்து வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. நாளை விடுமுறை என்பதால் இதே விலை நீடிக்கும்.

error: Content is protected !!