News April 16, 2025
விவசாயிகள் அடையாள எண் – காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு

விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் ஏப். 30 வரை அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் குறைந்த அளவிலான விவசாயிகளே அடையாள எண்ணை பெற்றுக் கொண்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த எண்ணை பெறாத விவசாயிகள் மத்திய அரசின் சலுகைகளை இழக்க நேரிடும். SHARE IT.
Similar News
News April 16, 2025
குஜராத்தில் தொடங்கும் அழிவுப் பாதை: ராகுல்

RSS, BJP-ஐ தோற்கடிக்கும் பாதை குஜராத்தில் இருந்து தொடங்குவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் நிர்வாகிகளிடையே பேசிய அவர், RSS – காங். இடையே இருப்பது அரசியல் சண்டை மட்டுமல்ல, கொள்கை சண்டை எனவும், கட்சியில் பல மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், காங். கட்சியால் மட்டும்தான் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
News April 16, 2025
பாங்காக்கில் ஆவி பறக்கும் ‘இட்லி கடை’

தனுஷ் இயக்கி நடிக்கும் படம் ‘இட்லி கடை’ அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இடம்பெற்றுள்ளது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்காக படக்குழு பாங்காக் சென்றுள்ள நிலையில் அங்கு சத்யராஜ், அருண்விஜய், பார்த்திபன் இருக்கும் புகைப்படம் வைரலாகிறது.
News April 16, 2025
வக்ஃப் சட்டத்தில் புதிய நடைமுறை ஏன்?!

இந்து அறநிலையத்துறையை இந்துக்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும் என்ற சட்டம் இருக்கும்போது வக்ஃப் வாரியத்துக்கு மட்டும் ஏன் புதிய நடைமுறை என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வக்ஃப் சொத்துகள் எவை என்பதை மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வது நியாயமானதா என்றும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. வக்ஃப் வாரிய சட்டதிருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.