News February 12, 2025

BCCIஐ வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

image

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இடம்பெறாததால், தேர்வுக்குழுவை ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். ஜெய்ஸ்வாலின் ODI கெரியரையே கம்பீர் பாழாக்கி விட்டதாகவும், ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு மாற்றாக ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்வதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ENGக்கு எதிரான ஒரு ODIயில் விளையாட விட்டு, அவரது திறமையை பரிசோதிப்பதா எனவும் வினவுகின்றனர்.

Similar News

News February 12, 2025

ரிஷப் பண்ட் உயிரை காப்பாற்றிய இளைஞர் மரணம்

image

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியபோது அவரது உயிரைக் காப்பாற்றிய இளைஞர் காதல் விவகாரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புர்காஜியைச் சேர்ந்த ரஜத்(25), மனு என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் விஷம் குடித்த நிலையில், ரஜத் உயிரிழந்தார். நல்ல மனிதனை சாதி கொன்றுவிட்டது என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News February 12, 2025

தொடர்ந்து சரியும் பங்குச்சந்தைகள்

image

இந்தியப் பங்குச் சந்தை இன்றும் சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 274 புள்ளிகள் சரிந்து 76,019 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 87.45 புள்ளிகள் சரிந்து 22,993 புள்ளிகளில் தொடர்கிறது. கடந்த சில நாட்களாகப் பங்குச்சந்தை சரிவால் பல லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 12, 2025

BREAKING: அதிமுக வழக்கில் தீர்ப்பு

image

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று ஐகோர்ட் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ரவீந்திரநாத், புகழேந்தி மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், உட்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!