News August 28, 2025
BCCI-க்கு எதிராக கொந்தளித்த ரசிகர்கள்

இன்று முதல் செப்., 15-ம் தேதி வரை நடைபெறும் துலீப் டிராபி தொடரின் காலிறுதி போட்டிகளை BCCI ஒளிபரப்பாததை கண்டித்து ரசிகர்கள் போர்க்குரல் எழுப்பியுள்ளனர். அரையிறுதி போட்டிகளையாவது ஒளிபரப்புமா என்பது இன்னும் தெரியவரவில்லை. இது போன்ற உள்ளூர் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க வேண்டும் என சமீபத்தில் BCCI அறிவுறுத்திய நிலையில், அதை ஒலிபரப்ப கூட முன்வராததால் ரசிகர்கள் சீற்றம் அடைந்துள்ளனர்.
Similar News
News March 7, 2026
T20 WC: நாளை வருண் விளையாடுவாரா?

வருண் சக்ரவர்த்தி நாளை நியூசிலாந்துக்கு எதிரான பைனலில் விளையாடுவது சந்தேகம் என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார், வருணின் ஃபார்ம் பற்றி தங்களுக்கு கவலையில்லை; நம்பர் 1 பவுலரான அவருக்கு அணியை எப்படி வெற்றி பெறச் செய்வது என்று தெரியும் என்று கூறினார். மேலும், லெவனில் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து நாளை தெரியவரும் என்றார்.
News March 7, 2026
மகளிருக்கு ₹5 லட்சம்.. ஜாக்பாட் தேர்தல் அறிவிப்பு

மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அடுக்கியுள்ளார். அதில் குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுகளில் உறுப்பினராக இருந்து MSME நிறுவனம் தொடங்குவோருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வழங்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இது 100% மானியம் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகளிர் நலனுக்காக தனி இலாகா தொடங்கப்பட்டு தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் விஜய் அறிவித்துள்ளார்.
News March 7, 2026
மீண்டும் கூட்டணி அறிவிப்புக்கு நாள் குறித்த ராமதாஸ்

TN-ல் அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டுக்கு சென்றுவிட்டனர். ஆனால், ராமதாஸ் தரப்பு இன்னும் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை. மகளிர் தின வாழ்த்து கூறிய ராமதாஸிடம் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இன்னும் 12 நாள்களில் கூட்டணி அறிவிப்பு வரும் என கூறியுள்ளார். ஏற்கெனவே 2 முறை தேதி குறித்தும் கூட்டணி அறிவிப்பு வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.


