News July 15, 2024
“TEENZ” படத்தை நோக்கி படையெடுக்கும் ரசிகர்கள்

“இந்தியன் 2”க்கு எதிர்மறை விமர்சனம் வந்ததை அடுத்து, “TEENZ” படத்திற்கு மக்கள் படையெடுக்கின்றனர். முதல் நாளில் கூட்டமே இல்லாமல் இருந்த அப்படத்திற்கு மறுநாள் டிக்கெட் கிடைக்காத அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது. இதுகுறித்து பார்த்திபன், மக்கள் திரையரங்கிற்கு வருவதை மட்டும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன். பணத்தை மீறி படைப்பிற்கான அங்கீகாரம் என்னைப் பரவசப்படுத்துகிறது என உருக்கமாக கூறியுள்ளார்.
Similar News
News November 23, 2025
ஹோட்டல் ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

ஹோட்டல் ஊழியர்கள் தவறாமல் Enteric காய்ச்சல் தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதற்காக தங்களது பணியாளர்களுக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் தலா ₹500 கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
போதை – பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும்: PM மோடி

போதைப் பொருள் மற்றும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் PM மோடி வலியுறுத்தியுள்ளார். போதைக் கடத்தல் தடுப்பை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற அவர், ஃபென்டனில் போன்ற போதைப் பொருள்கள் பரவலையும், போதை-பயங்கரவாத கூட்டையும் ஒழிக்க வேண்டுமென்றார். மேலும், பயங்கரவாதத்தை வளர்க்கும் நிதி மூலங்களை தடுக்க முயற்சிக்கவும் அழைப்பு விடுத்தார்.
News November 23, 2025
ராசி பலன்கள் (23.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


