News June 18, 2024
விஜய் சேதுபதியின் பதிலால் ரசிகர்கள் குழப்பம்

புஷ்பா-2 படத்தில் நடிக்க மறுக்கவில்லை என விஜய் சேதுபதி கூறியுள்ளார். மகாராஜா படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் புஷ்பா-2 படத்தில் நடிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, நான் நடிக்க மறுக்கவில்லை எனக் கூறிய விஜய் சேதுபதி, எப்போதும் நீங்கள் உண்மையை மட்டுமே பேசக்கூடாது. சில நேரங்களில் பொய் பேசுவது நல்லது என்றார். இதனால், அவர் நடிக்க மறுத்தாரா? இல்லையா? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
Similar News
News March 15, 2026
திருச்சி: மக்கள் நீதிமன்றத்தில் 3746 வழக்குகளுக்கு தீர்வு

திருச்சி நீதிமன்றத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணை குழுவின் சார்பில், நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் குற்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், மோட்டார் வாகன நஷ்ட ஈடு வழக்குகள் என மொத்தம் 21,968 வழக்குகளில் 3746 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, தீர்வு தொகையாக ₹.96 கோடியே 91 லட்சத்து 22 ஆயிரத்து 833 வழங்கப்பட்டது.
News March 15, 2026
BREAKING: தமிழ்நாடு தேர்தல் தேதி.. வெளியானது UPDATE

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் SIR மேல்முறையீடு பணிகள் இன்று நிறைவடைய உள்ளன. இதனால், வரும் செவ்வாய்கிழமை தேர்தல் தேதியை அறிவிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இன்று காலை 11 மணிக்கு தேர்தல் ஆணையர்களின் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் தேர்தல் தேதி வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
News March 15, 2026
30 சிட்டிங் MLA-க்களுக்கு சீட் மறுக்கிறதா திமுக?

திமுகவுக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் பென் நிறுவனம், உளவுத்துறை ரிப்போர்ட், மற்றொரு தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயின் அடிப்படையில் திமுக வேட்பாளர் பட்டியல் தயாராகிறதாம். இதன்படி, செயல்பாடுகளின் அடிப்படையில் 30 சிட்டிங் MLA-க்களுக்கு சீட் கிடையாது என கூறப்படுகிறது. தேர்தல் செலவு உள்பட தொகுதிக்கு ₹20 கோடி வரை வேட்பாளர்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


