News March 19, 2024
CSK பயற்சி ஆட்டத்தை காண ரசிகர்களுக்கு அனுமதி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தை காண, ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதற்காக, கடந்த வாரம் சென்னை சேப்பாக்கத்திற்கு வந்த CSK அணி, தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. போட்டிக்கான டிக்கெட்டுகள் பலருக்கும் கிடைக்காததால், இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 15, 2026
மகளிருக்கு மேலும் ₹5,000.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

பிப்.13-ல் மகளிர் வங்கிக் கணக்கில் ₹5,000 வரவு வைத்து தமிழக அரசு சர்ப்ரைஸ் கொடுத்தது. தற்போது, மேலும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் மீண்டும் ₹5,000 வழங்க அரசு திட்டமிட்டு வருகிறதாம். மகளிருக்கான கடனுதவி (அ) சுயதொழில் தொடங்கும் திட்டமாக இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கான, இறுதி வடிவம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
News February 15, 2026
அதிமுக யாருக்கும் அடிமை இல்லை: EPS

பாஜகவின் கிளை கழகம் என அதிமுகவை CM ஸ்டாலின் விமர்சித்துள்ள நிலையில், திமுகதான் காங்.,க்கு அடிமையாக உள்ளதாக EPS பதிலடி கொடுத்துள்ளார். ஈரோடு பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக சொந்தக் காலில் நிற்கும் கட்சி என்றார். யாருக்கும் அடிமைக் கட்சி கிடையாது எனவும், தன்மானம் உள்ள கட்சி அதிமுக என்றும் குறிப்பிட்டார். மேலும், திமுக ஆட்சியில் மணல் கொள்ளை ஜோராக நடப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
News February 15, 2026
பெண்களுக்கு பஸ்சில் தொல்லையா? Must Read..

அரசு பஸ்களில் ‘PANIC’ என்ற பட்டனை TNSTC அறிமுகப்படுத்தியுள்ளது. பயணத்தின்போது பெண்களுக்கு ஏதேனும் அசெளகரியங்கள் ஏற்பட்டால், இந்த பட்டனை அழுத்தலாம். உடனடியாக, அருகிலுள்ள Control Room-க்கு மெசேஜ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பஸ்சின் லொகேஷனை கண்டறிவதற்காக VLTD என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இத்திட்டம், ஊட்டியில் 16 மாசில்லா பஸ்களில் தொடங்கப்பட்டுள்ளது.


