News September 27, 2025
ரசிகர்களின் செயல்பாடே கரூர் சோகத்துக்கு காரணம்: CPM

எந்த கட்டுப்பாடுகளுக்கும் தங்களை உட்படுத்திக்கொள்ள மாட்டோம் என்ற ரசிகர்களின் செயல்பாடுகளே கரூர் உயிரிழப்புகளுக்கு காரணம் என CPM மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இந்த உயிரிழப்புகள் குறித்து உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனவும் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்தது மிகப்பெரிய சோகம் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News January 10, 2026
உலகக் கோப்பை அணியில் இடமில்லை.. மனம் திறந்த கில்!

T20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறாதது குறித்து முதல் முறையாக ஷுப்மன் கில் மனம் திறந்துள்ளார். தேர்வாளர்களின் முடிவை மதிப்பதாக தெரிவித்த அவர், உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்குத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், நாட்டிற்காக விளையாடும் ஒவ்வொரு வீரரும் தனது சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சிப்பார்கள்; ஆனால் அணியைத் தேர்ந்தெடுக்கும் முடிவு தேர்வாளர்களை பொறுத்தது என அவர் குறிப்பிட்டார்.
News January 10, 2026
BREAKING: விஜய் படம் பொங்கலுக்கு ரிலீஸ்.. அறிவிப்பு

சென்சார் பிரச்னையால், ‘ஜனநாயகன்’ படம் பொங்கலுக்கு வருமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில், விஜய் நடித்த ‘தெறி’ படம் பொங்கலையொட்டி ஜன.15-ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக தயாரிப்பாளர் தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜனநாயகனுக்கு பதில் தெறி வெளியாவதால், விஜய் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
News January 10, 2026
அயோத்தியில் அசைவ உணவு டெலிவரி செய்ய தடை

அயோத்தி ராமர் கோயிலை சுற்றியுள்ள 15 கிமீ-க்கு அசைவ உணவுகளை டெலிவரி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் அசைவத்திற்கு ஏற்கெனவே தடை அமலில் உள்ள நிலையில், தற்போது ஆன்லைன் டெலிவரிக்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறி அசைவ உணவுகளை டெலிவரி செய்தால், சம்பந்தப்பட்ட ஆன்லைன் தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


