News August 29, 2025

இன்று நடிகர் விஷாலுக்கு நிச்சயதார்த்தம்!

image

நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெறுகிறது. நடிகர் சங்க பில்டிங்கை கட்டி முடித்துவிட்டு தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருந்த விஷால், தற்போது கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், திருமண பந்தத்தில் நுழைய இருக்கிறார். சென்னையில் உள்ள விஷாலின் வீட்டில் இரு வீட்டார் & நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

Similar News

News August 29, 2025

நிகிதா நகைத் திருட்டு குறித்து CBI வழக்குப் பதிவு

image

மடப்புரம் காவலாளி அஜித்குமார் லாக்அப் டெத் வழக்கை CBI விசாரித்து வருகிறது. ஜூன் 27 அன்று நகை காணாமல் போனதாக நிகிதா அளித்த புகாரின் பேரில் CBI தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது. முன்னதாக, மதுரை மாவட்ட கோர்ட்டில் CBI, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால் நகைத் திருட்டு பற்றி விசாரணை துவங்காததால், வழக்குப் பதிந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது.

News August 29, 2025

பொது அறிவு வினா விடை கேள்விகள்

image

1. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?
2. வீரமாமுனிவர் எந்த காப்பியத்தை இயற்றினார்?
3. மிகவும் லேசான உலோகம் எது?
4. இஸ்ரோவின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
5. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முதலில் 10,000 ரன்களை அடித்த வீரர் யார்?
சரியான பதில்களை கமெண்ட் செய்யவும். பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.

News August 29, 2025

நாளை கிளம்புகிறேன்.. சற்றுமுன் ஸ்டாலின் அறிவிப்பு

image

நாளை முதல் ஒரு வாரம் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக CM ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதன்படி, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணமாகச் செல்லும் அவர், தமிழகத்திற்கு முக்கிய முதலீடுகளை கொண்டுவர உள்ளார். திமுக ஆட்சி அமைந்த 4.5 ஆண்டுகளில் ₹10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!