News March 20, 2025
பிரபல பாம்பு பிடி வீரர் சந்தோஷ் மரணம்

கோவையை சேர்ந்த பிரபல பாம்பு பிடி வீரரான சந்தோஷ் (39) நாகப்பாம்பு கடித்ததில் உயிரிழந்தார். கடந்த 15 ஆண்டுகளாக பாம்பு பிடி தொழில் செய்து வந்த அவரை, Snake Santhosh என பலரும் அழைப்பர். குடியிருப்புப் பகுதியில் நுழைந்த பல்லாயிரக்கணக்கான பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து வனத்துறை உதவியுடன் வனப்பகுதியில் விட்டவர். கொங்கு மண்டலத்தில் பிரபலமான சந்தோஷின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News March 21, 2025
CM, MLA-க்கள் சம்பளம் இரட்டிப்பாக உயரப்போகுது…!

கர்நாடக சட்டப்பேரவை பிரதிநிதிகளின் ஊதியத்தை இரட்டிப்பாக்கும் மசோதா நாளை கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால், அம்மாநில முதல்வருக்கு மாத சம்பளமாக ரூ.1.5 லட்சம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர்களுக்கு தலா 1.25 லட்சம், எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.80,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 21, 2025
2600 பேர் நிர்வாணமாக… 11 நாட்கள்

அமெரிக்காவில் ஆச்சரியங்களுக்கு அளவில்லை. nude cruise எனப்படும் நிர்வாண சொகுசுக் கப்பல் பயணமும் அதிலொன்று. அடுத்த ஆண்டு, பிப்.9-ம் தேதி, Norwegian Pearl கப்பலில் தொடங்கும் 11 நாள் பயணத்தில் 2300 பேர் பங்கேற்பர். நிர்வாணமாக சென்றாலும், இப்பயணத்தில் ஆபாசமாக நடந்துகொள்ளவோ, சுகாதாரமற்ற செயல்பாடுகளுக்கோ அனுமதி இல்லை. ட்ரிப்புக்கு கட்டணம் சாதாரண டிக்கெட்: ₹1,72,000. டீலக்ஸ் கட்டணம்: ₹28,53,657 மட்டுமே.
News March 21, 2025
ஸ்டைலிஸ் லுக்கில் ‘எம்புரான்’ நாயகி…!

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடித்துள்ள எம்புரான் படம் மார்ச் 27-ல் வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி சோஷியல் மீடியாவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மஞ்சுவாரியர், தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். கோட் அணிந்து மிடுக்காக இருக்கும் அவரது புகைப்படங்களுக்கு ரசிகர்களை லைக்குகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.