News October 4, 2025
பிரபல பாடகர் மரணம்.. அதிர்ச்சி தகவல் வெளியானது

அசாம் பாடகர் <<17761763>>ஜுபின் கார்க்<<>> மர்ம மரணம் தொடர்பாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜுபின் கார்க்கின் மேனேஜரும், சிங்கப்பூர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் இணைந்து அவருக்கு விஷம் கொடுத்து கொன்றதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரில் ஒருவரான சேகர் ஜோதி கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இதனை விபத்துபோல் சித்தரிக்கவே, கொலையாளிகள் வெளிநாட்டில் வைத்து கொலையை அரங்கேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 4, 2025
BREAKING: வைகோ மருத்துவமனையில் அனுமதி

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை தனியார் ஹாஸ்பிடலில் டாக்டர்கள் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சளி பிரச்னை காரணமாக அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
News October 4, 2025
ஆறாத தழும்புகள் இருக்கா? ஈசியா போக்கலாம்

➤தழும்புகள் மீது ஆலிவ் எண்ணெய், மீன் எண்ணெய், வைட்டமின் E எண்ணெய் மசாஜ் செய்யலாம் ➤வாரம் ஒருமுறை தயிர்-அரிசி மாவு கலந்து தழும்புகளின் மீது மிதமாக தேய்த்தால், இறந்த செல்கள் நீங்கும் ➤காஃபி தூளை தேனுடன் கலந்து தழும்புகள் மீது 5 நிமிடம் மசாஜ் செய்யுங்கள் ➤உணவில் அதிகம் விட்டமின்ஸ், மினரல்ஸ் சேருங்கள் ➤தண்ணீர் நிறைய குடிக்கவேண்டும். சிறிய தழும்புகள் நீங்க இவை பயனளிக்கலாம். SHARE பண்ணுங்க.
News October 4, 2025
BREAKING: ஃபரூக் அப்துல்லா ஹாஸ்பிடலில் அனுமதி

ஜம்மு & காஷ்மீர் முன்னாள் CM ஃபரூக் அப்துல்லா, உடல்நலக்குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நிலைமை மோசமடைந்ததால் தற்போது தனியார் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தேசிய மாநாட்டு கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.