News April 15, 2025
முறையற்ற உறவு விவகாரத்தில் பிரபல மாடல் மேக்னா கைது!

ஏற்கனவே திருமணமான சவுதி அரேபிய நாட்டுத் தூதருடன் தகாத உறவில் இருந்த பிரபல மாடல் அழகி மேக்னா ஆலம் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பாக மேக்னா ஆலம் பேஸ்புக்கில் LIVE வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் சிலர் தன்னை சமாதானம் செய்ய முயன்றதாகவும் கூறி அவர்களையும் சிக்க வைத்துள்ளார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
Similar News
News December 13, 2025
சேலத்தில் குறைந்த விலையில் பைக், கார் வேண்டுமா?

சேலம் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு, மூன்று மற்றும் இருசக்கர வாகனங்கள் வரும் டிச.23 அன்று லைன்மேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் வாகன வகையைப் பொறுத்து காலை 8:00 மணி முதல் 10:00 மணிக்குள் முன்பணம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04272431200, 94981 02546. 94981 66304 அழைக்கவும். உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்.
News December 13, 2025
12-வது போதும்.. மத்திய அரசில் 208 காலியிடங்கள்!

✱தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள 208 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✱கல்வித்தகுதி: 12-வது தேர்ச்சி ✱வயது: 18- 21 ✱சம்பளம்: பதவிக்கேற்ப மாறுபட்டது ✱தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, அறிவுத்திறன் & ஆளுமைத் தேர்வுகள் நடைபெறும் ✱விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2025 ✱விண்ணப்பிக்க <
News December 13, 2025
சற்றுமுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை ஆதம்பாக்கம் போலீசார் சற்றுமுன் அதிரடியாக கைது செய்துள்ளனர். பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால், இதை மறுத்த சவுக்கு சங்கர், சென்னை மாநகர ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று வெளியிட்டதாலேயே கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.


