News July 5, 2025
பிரபல மார்வெல் பட நடிகர் காலமானார்!

உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜூலியன் மக்மஹோன் (56) புற்றுநோயால் காலமானார். மார்வெலின் ‘Fanstastic Four’ படங்களில் Dr.Doom கேரக்டரில் நடித்து இந்திய ரசிகர்களுக்கு பரிச்சயமான இவர், அண்மையில் FBI தொடரில் நடித்து உலகளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளார். ஆஸ்திரேலிய Ex. PM வில்லியமின் மகனான இவரின் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIP
Similar News
News July 5, 2025
அஜித் மரணம்: போராட்டத்தின் தேதியை மாற்றிய தவெக

அஜித்குமார் மரணத்தை கண்டித்து தவெக வரும் 12-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 6-ம் தேதி போராட்டம் நடத்த தவெக திட்டமிட்டிருந்தது ஆனால் காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தை அவர்கள் நாடிய போது, தவெக ஏன் போராட்டத்திற்கு அவரசப்படுகிறது என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனால் தேதியை அக்கட்சி மாற்றியுள்ளது.
News July 5, 2025
நடிகர்கள் போதைப்பொருள் விவகாரம்… அதிரடி கைது!

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்பட்டது கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், பல நடிகர்கள், நடிகைகள் கூட போதைப்பொருள் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், போதைப்பொருள் விற்பனையாளராக இருந்த பயாஸ் ஷமேட் என்பவரை போலீஸ் கைது செய்திருக்கிறது. அவரிடம் விசாரணை நடத்தினால், மேலும் பல பிரபலங்கள் சிக்க வாய்ப்புள்ளது.
News July 5, 2025
விதிகளை மீறிய ஜடேஜா..! பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா?

இங்கி., எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஜடேஜா 41 ரன்கள் அடித்திருந்தார். ஆனால் 2ம் நாள் அதிகாலையிலே அணி பேருந்துக்கு காத்திருக்காமல் மாற்று வாகனம் மூலம் மைதானத்துக்கு சென்று பயிற்சி மேற்கொண்டார். இந்திய வீரர்கள் தொடர்களில் விளையாடும் போது பிசிசிஐ ஏற்பாடு செய்யும் வாகனங்களிலே பயணிக்க வேண்டும் என விதிகள் உள்ளன. இதை ஜடேஜா மீறியிருந்தாலும் பிசிசிஐ நடவடிக்கை எடுக்கவில்லை.