News April 14, 2025
பிரபல கன்னட காமெடி நடிகர் மரணம்!

பிரபல கன்னட காமெடி நடிகர் பேங்க் ஜனார்தன் (75) காலமானார். உடல்நலக்குறைவால் பெங்களூரு மணிபால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. 1948-ல் பிறந்த ஜனார்தன், பேங்க்கில் பணியாற்றி, பின்னர் திரைத்துறைக்கு வந்ததால், அந்தப் பெயர் அவருக்கு வந்தது. தர்லே நன் மகா, கணேஷ் சுப்ரமணியா என 500–க்கும் மேற்பட்ட படங்களிலும், சின்னத்திரையிலும் நடித்துள்ளார். #RIP
Similar News
News April 15, 2025
சனி வக்ர பெயர்ச்சி: ராஜ யோகம் அடிக்கும் 3 ராசிகள்

சனி பகவான், வரும் ஜூலை 13-ல் மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் நேர்மறை பலன்கள் அடையும் ராசிகள்: *கன்னி: வேலை, தொழிலில் முன்னேற்றம். காதல், திருமண வாழ்க்கை சிறக்கும். வீடு, வாகன யோகம் *மீனம்: ஆரோக்கியம், ஆற்றல் அதிகரிக்கும். செல்வாக்கு கூடும். வேலை, தொழிலில் முன்னேற்றம் *மகரம்: அதிர்ஷ்டம் சாதகமாகும். வெற்றி கிடைக்கும். வாய்ப்புகள் தேடிவரும், மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும்.
News April 15, 2025
ஐநாவில் சட்டமேதையின் பிறந்தநாள் கொண்டாட்டம்

நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நேற்று அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதில் பேசிய மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளும் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடுவதாக தெரிவித்தார். அதேபோல், நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், ஏப்ரல் 14ஆம் தேதியை அம்பேத்கர் தினமாக அறிவித்தார்.
News April 15, 2025
125 ஆண்டு பழமையான ஒப்பந்தம்: சிக்கிய சோக்ஷி

வங்கி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்ஷியை கைது செய்ததற்கு 125 ஆண்டு பழமையான ஒப்பந்தமே காரணமாம். சுதந்திரத்திற்கு
முன்பாக இந்தியாவை ஆண்ட பிரிட்டன் 1907 ல் இரு நாட்டுக்கும் இடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதில், பணமோசடியில் சிக்குவோரை பரஸ்பரம் நாடு கடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. அது தான் வங்கியை மோசடி செய்த சோக்ஷியை பிடிக்க உதவியிருக்கிறது.