News April 30, 2025
பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்!

பிரபல ஹாலிவுட் நடிகை பிரிஸ்கில்லா பாய்ண்டர்(100) காலமானார். 1976-ல் ஹாலிவுட்டில் அறிமுகமான இவர், தொடர்ந்து 2008-ம் ஆண்டு வரை தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார். Blue velvet, Disturbed போன்ற மெகா ஹிட் படங்களிலும் Flash, Dallas போன்ற பிரபலமான ஹிட் தொடர்களிலும் பிரிஸ்கில்லா நடித்துள்ளார். இவர் மறைவுக்கு ரசிகர்களும், திரை துறையினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #RIP.
Similar News
News December 6, 2025
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் புது அப்டேட்!

நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் ’சிக்மா’ படத்தில் நடிகை கேத்ரின் தெரசா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு இவர் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு, தமன் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழி படமாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
News December 6, 2025
தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவது டவுட்டா?

பாஜகவில் நயினார், அண்ணாமலைக்கு இடையேயான மோதல் கொளுந்துவிட்டு எரிவதாக பேசப்படுகிறது. அண்ணாமலை தரப்பை பேஸ்மெண்ட்டோடு தகர்க்கும் பிளானில் இருக்கும் நயினார், தொடர்ந்து அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கிவருகிறாராம். அத்துடன் வரும் தேர்தலில் அண்ணாமலைக்கு சீட் கிடைக்கக்கூடாது என நயினார் தீர்க்கமாக இருப்பதாகவும், இதுகுறித்து டெல்லி பாஜகவிடம் அவர் பேசிவருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர்.
News December 6, 2025
BREAKING: தங்கம் விலை சரசரவென மாறியது

கடந்த 2 நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹96,320-க்கும், கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹12,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


