News April 25, 2025
பிரபல ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் காலமானார்!

ஹாலிவுட்டின் பிரபல நடிகை லார் பார்க் லிங்கன் காலமானார். 45 ஆண்டுகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு வயது 63. அவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருந்த போதிலும், மரணத்திற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. மிக பிரபலமான, ‘Friday the 13th’ மற்றும் ‘Knots Landing’ போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார் லார். இவர் அதிகமாக, நடித்திருப்பது பேய் படங்களிலும், தொடர்களிலும் தான். #RIP.
Similar News
News April 25, 2025
MRK பன்னீர் செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து

வருமானத்திற்கு அதிகமாக ₹3 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் MRK பன்னீர் செல்வம் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 2006-11 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த போது சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
News April 25, 2025
மகளிர் உரிமைத் தொகைக்கு ஜூனில் விண்ணப்பம்: CM

மகளிர் உரிமைத் தொகைக்கு ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 9,000 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற இருப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த முகாம்களில், பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
News April 25, 2025
இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவுடன் காணப்படுகிறது. தீவிரவாத தாக்குதலால் எல்லையில் நிலவும் பதற்றம் உள்ளிட்டவை இன்று பங்குச்சந்தைகளில் எதிரொலித்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 338 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. நிதி தொடர்பான நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.