News April 27, 2025
பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் லோரி காலமானார்

ஹாலிவுட் நடிகர் பிலிப் லோரி (88) காலமானார். வயது மூப்பின் காரணமாக அவர் காலமானார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஒரு டிவி தொடரின் கதாபாத்திரத்தில் நீண்ட காலம் நடித்தவர் என்ற கின்னஸ் சாதனை இவரையே சேரும். ஹாலிவுட்டில் மிக பிரபலமான ‘Coronation Street’ சீரியலில் 1960-1968 வரை டெனிஸ் டேனராக நடித்தவர், பிறகு மீண்டும் அதே கதாபாத்திரத்தில் 2011 முதல் இறக்கும் வரை நடித்துள்ளார். #RIP.
Similar News
News November 13, 2025
விதவிதமாக நிறங்களில் கண்கள் – ஸ்வைப் பண்ணுங்க

உலகில் மனிதர்கள் பல விதம் என்பதுபோல, கண்களின் நிறங்களும் பல விதமான வண்ணங்களில் காணப்படுகின்றன. பெரும்பாலான மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட வண்ணத்திலும், அரிதாக சிலருக்கு மட்டுமே பிற வண்ணங்களில் உள்ளன. என்னென்ன வண்ணங்களில் கண்கள் உள்ளன, அவை எத்தனை சதவீத மக்களுக்கு உள்ளன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 13, 2025
₹397 கோடி ஊழல்.. திமுக அரசு மீது அறப்போர் புகார்

₹397 கோடி ஊழலின் முக்கிய புள்ளிக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. தலைமை நிதி கட்டுப்பாட்டாளராக (CFC) பதவி உயர்வு பெற்றுள்ள காசி , டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் செந்தில் பாலாஜியுடன் சேர்ந்து செய்த செட்டிங் காரணமாக சந்தை விலையை விட 40% அதிகமாக டெண்டர் ஆணை வழங்கப்பட்டதாக புகாரளித்துள்ளது. இது திமுக ஊழல் மாடலின் மற்றொரு சாதனை என்றும் அறப்போர் சாடியுள்ளது.
News November 13, 2025
ஹீரோ லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?

இயக்கத்திற்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு, ஹீரோவாக களமிறங்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில், அறிமுகமாகும் முதல் படத்திலேயே முன்னணி ஹீரோக்களுக்கு நிகராக, ₹35 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘DC’ படத்தில் கதை, திரைக்கதை, வசனத்திலும் லோகேஷின் பங்களிப்பு உள்ளதால் சன் பிக்சர்ஸ் இந்த தொகையை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


