News April 7, 2025
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜே நார்த் காலமானார்

குழந்தை நட்சத்திரமாக ஹாலிவுட்டில் அறிமுகமான நடிகர் ஜே நார்த்(73) பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார். இவர், பிரபலமான ‘Dennis the menace’ தொடரிலும், 1999ல் வெளிவந்த தி சிம்ப்சன்ஸ் படத்திலும் நடித்திருந்தார். தன்னுடைய அசாத்திய திறமையால் கால் நூற்றாண்டு ஹாலிவுட்டை கலக்கிய அவருக்கு, திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #RIP
Similar News
News April 9, 2025
மக்களே, இவர்களை தவிருங்கள்

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க, இந்த குணங்கள் கொண்டவர்களை தவிருங்கள்:
1. உங்களிடம் பொய் சொல்பவர்கள்
2. உங்களை அவமதிப்பவர்கள் / மரியாதை கொடுக்காதவர்கள்
3. உங்களை தம் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்பவர்கள்
4. உங்களின் தன்னம்பிக்கையை கெடுப்பவர்கள் / தலைகுனிய செய்பவர்கள்.
இதை செய்தாலே, உங்களுக்கு நல்ல காலம் தான். வேறு எந்த மாதிரி நபர்களை தவிர்க்க வேண்டும்? உங்கள் அனுபவத்தில் இருந்து சொல்லுங்களேன்.
News April 9, 2025
இது தேவையா? தொண்டையில் மீன் சிக்கி இளைஞர் மரணம்

சென்னை மதுராந்தகம் அருகே தொண்டையில் மீன் சிக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். 29 வயதான மணிகண்டன் அங்குள்ள ஏரியில் கைகளால் மீன்பிடித்தார். அப்போது 2 மீன்கள் சிக்கவே, அதில் ஒரு மீனை தனது வாயில் வைத்தபடி இன்னொரு மீனை கைகளில் பிடித்துக்கொண்டார். இதில் வாயில் இருந்த மீன் நழுவி தொண்டையில் போய் சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு விட முடியாமல் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
News April 9, 2025
நீட் விலக்கு பெறும் நம்பிக்கை வந்திருக்கிறது: முதல்வர்

மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் சிதைப்பதாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநர் அரசியல் செய்ததாகத் தெரிவித்துள்ளார். ஆனால், ஆளுநரின் அதிகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.