News April 5, 2025
பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்

யுனிவர்சல் சோல்ஜர்(1992), ஹெர்குலஸ்: தி லெஜன்டரி ஜர்னி உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ராபர்ட் ட்ரோபர். பிளட் கேன்சரால் பாதிக்கப்பட்ட அவர், ஸ்டம்செல் டிரான்ஸ்பிளான்ட் சிகிச்சை எடுத்தார். ஆனால், இது பக்கவிளைவு ஏற்படுத்தியதால் சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News January 5, 2026
தமிழ் நடிகர் காலமானார்… கடைசி PHOTO

பிரபல நடிகர் லொள்ளு சபா <<18763586>>வெங்கட் ராஜ்<<>> காலமான நிலையில், உயிரற்று கிடக்கும் அவரின் கடைசி போட்டோ வெளிவந்து, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று மாலை சென்னை வேளச்சேரியில் அவரின் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. தங்களை இத்தனை ஆண்டுகளாக மகிழ்வித்த ஆருயிர் நண்பன் உடன் இல்லையே என்ற சோகம் மனதில் நிறைந்தபடி, லொள்ளு சபா குழுவினரும், சினிமா நட்சத்திரங்களும் அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News January 5, 2026
தவெகவில் இணைய திட்டமா? MLA ஐயப்பன் ரியாக்ஷன்

OPS ஆதரவாளரான MLA ஐயப்பன் தவெகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள அவர், தவெகவில் இணைவதாக வெளியான தகவல் வதந்தி என்று தெரிவித்துள்ளார். பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சென்றிருப்பதாக கூறப்படுவது தவறான தகவல் என்று கூறிய அவர், தான் தற்போது மதுரையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடைசி வரை OPS-வுடன் தான் இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 5, 2026
மீண்டும் அமித்ஷாவுடன் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை

தமிழகம் வந்துள்ள அமித்ஷா, பியூஷ் கோயல் ஆகியோருடன் 2-ம் நாளாக இன்றும் அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை தொடர்கிறது. நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 40 தொகுதிகளுக்கு மேல் பாஜக தரப்பில் கேட்டதாக தெரிகிறது. இந்நிலையில். மீண்டும் சந்தித்துள்ள எஸ்.பி.வேலுமணி, NDA கூட்டணியில் இடம்பெற வேண்டிய கட்சிகள், தொகுதிப்பங்கீடு குறித்து அதிமுகவின் நிலைப்பாட்டை விரிவாக ஆலோசித்து வருகிறார்.


