News March 30, 2025

பிரபல ஹாலிவுட் ஆக்‌ஷன் நடிகர் மரணம்

image

ஹாலிவுட்டின் பிரபல நடிகரும் சண்டை பயிற்சியாளருமான ரிச்சர்ட் நார்ட்டன்(75) காலமானார். ஹாலிவுட்டின் முக்கிய நடிகர்கள், நடிகைகளுக்கு ஸ்டண்ட் பயிற்சி கொடுத்தவர் நார்ட்டன். ஜாக்கி சான், சமோ ஹங், சிந்தியா ரத்ரோக் போன்ற பெரிய தற்காப்பு நடிகர்களுடனும் இவர் திரையில் மல்லுக்கட்டியுள்ளார். The Condemned, Mad Max: Fury Road, Suicide Squad, Furiosa:A Mad Max Saga ஆகியவை இவரது லேட்டஸ்ட் படங்களில் முக்கியமானவை.

Similar News

News April 1, 2025

ஒவ்வொரு ஆண்டும் உயரும் GST வசூல். சுகமா? சுமையா?

image

மார்ச் மாதத்திற்கான GST வசூல் ₹1.96 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு மார்ச் மாத வசூலை விட 9.9% அதிகமாகும். கடந்த நிதியாண்டுக்கான மொத்த GST வசூல் ₹22.08ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் தொகை அதிகரித்து வருவது மக்கள் மீது சுமையாக வந்து இறங்குகிறது. அதேநேரம், அதிக வரி வசூல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆக, GST வரி சுகமா? சுமையா?

News April 1, 2025

தெருநாய்களை கருணைக் கொலை செய்யுங்க: அன்புமணி

image

ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ரேபிஸால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும் எனவும், 70% தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதே இதற்கு தீர்வாக இருக்கும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News April 1, 2025

3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

image

பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 11ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது.

error: Content is protected !!