News April 7, 2025
பிரபல கால்பந்து வீரர் மரணம்

கொலம்பியாவின் கால்பந்து ஜாம்பவானும், பயிற்சியாளருமான ஜோர்கெ பொலானோ (47) காலமானார். நல்ல பிட்னெஸுடன் இருந்த அவர், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கொலம்பியா கால்பந்தை உலக தரத்துக்கு உயர்த்தியவர்களில் ஒருவரான இவர் 1998-ம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தார். கோபா இத்தாலியா கோப்பையையும் வென்றிருக்கிறார். இவரின் மறைவுக்கு கால்பந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 8, 2025
LSG முதலில் பேட்டிங்

ஐபிஎல் தொடரில் இன்று மதியம் ஒன்று, மாலை ஒன்று என இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. கொல்கத்தா – லக்னோ இடையே நடைபெறவிருக்கும் மதியப் போட்டியில் கொல்கத்தா கேப்டன் ரஹானே டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
News April 8, 2025
விஜய்க்கு ஏமாற்ற தெரியும், அரசியல் தெரியாது: தமிழிசை

சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசை விமர்சித்த விஜய்-க்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். ‘விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன?, பாமர மக்களுக்காக நடிக்கிறேன், குறைந்த விலையிலோ இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன்’ என இருக்க வேண்டியதுதானே, யார் தடுத்தார்கள் எனக் கூறிய அவர், விஜய்-க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ பொருளாதாரமோ தெரியாது என சாடினார்.
News April 8, 2025
கடன்களுக்கான வட்டியை குறைத்தது HDFC வங்கி

கடன்களுக்கான MCLR வட்டி விகிதத்தை 10 புள்ளிகள் வரை HDFC குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வருவதாக HDFC தெரிவித்துள்ளது. வட்டி குறைப்புக்கு பிறகு ஏற்கெனவே கடன் வாங்கியோருக்கான வட்டி விகிதம் 9.10% – 9.35% வரை இருக்கும் என்றும் HDFC குறிப்பிட்டுள்ளது. MCLR வட்டி விகிதம் என்பது முதலீட்டை அடிப்படையாக கொண்டு அளிக்கப்படும் கடன் மீது விதிக்கப்படும் வட்டியாகும்.