News April 17, 2025

பிரபல பெண் எழுத்தாளர் காலமானார்

image

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளரும், பழங்குடியின ஆர்வலருமான ரோஸ் கெர்கட்டா காலமானார். கொரோனா காலகட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து படுத்த படுக்கையாக இருந்தார். மேலும் அவர் பல்வேறு உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதுகுறித்து கேள்விப்பட்டு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News April 19, 2025

இந்த அறிகுறிகள் தெரியுதா.. கல்லீரலில் பிரச்னை இருக்கு!

image

இன்று கல்லீரல் நாள். கல்லீரல் பிரச்னை இருந்தால், நமது உடல் சில எச்சரிக்கை அறிகுறிகளை கொடுக்கும். நன்றாக சாப்பிட்டாலும் சோர்வு,
மஞ்சள் காமாலை, அடிவயிற்றின் மேல் வலது பக்கத்தில் வலி அல்லது வீக்கம், வாந்தி, எளிதில் ரத்தப்போக்கு, கால் வீக்கம் அல்லது கால்களில் அரிப்பு போன்ற அறிகுறிகளை அசால்ட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். SHARE IT.

News April 19, 2025

என் உயிராடுற.. என்னடி மாயாவி நீ…

image

பிகில் புகழ் அம்ரிதா ஐயரின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு படுவைரலாகி வருகிறது. ஓவர் மேக்-அப் இன்றி, அழகிய ஆரஞ்ச் நிற சேலையில் க்யூட்டாக போஸ் கொடுத்து போட்டோஸை அவர் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த, நெட்டிசன்கள் நேற்று முதல் தங்களது தூக்கத்தை தொலைத்து விட்டனர். ‘றெக்க மட்டும் இருந்த அம்ரிதா தேவதைடா’ எனவும் வர்ணித்து வருகின்றனர்.

News April 19, 2025

அசாமில் மீண்டும் நில அதிர்வு

image

வடகிழக்கு மாநிலமான அசாமில் இன்று காலை 7.38 மணியளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. பூமிக்கு கீழே 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு 25 விநாடிகள் வரை நீடித்தது. ரிக்டர் அளவில் 2.9 வரை நில அதிர்வு பதிவானதால் கட்டடங்கள் மிக லேசாக குலுங்கின. இதற்கு முன் கடந்த பிப்.27 தேதி 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!