News April 15, 2025
பிரபல இயக்குநர் S.S.ஸ்டான்லி காலமானார்

பிரபல இயக்குநரும், நடிகருமான S.S.ஸ்டான்லி(58) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். தனுஷ் நடிப்பில் ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’, ஸ்ரீகாந்த் நடிப்பில் ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பெரியார் திரைப்படத்தில் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். ஸ்டான்லி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News January 19, 2026
பராசக்தி கேரக்டராக மாறிய சீமான்

கடந்த 3 தலைமுறைகளாக தாய்மொழியை எழுத படிக்க தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கியுள்ளோம் என சீமான் கூறியுள்ளார். தமிழ் படிக்காமலேயே உயர்ந்த பட்டம் பெற்று பணிக்கு சென்றுவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டதாக கூறிய அவர், மொழி போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியை பிடித்த திமுக, ஹிந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை என்றார். மேலும், பராசக்தி படத்தில் வரும் செழியன் கதாபாத்திரம் நான்தான் எனவும் தெரிவித்துள்ளார்.

குடும்ப அட்டைகளுக்கு ₹3,000.. தமிழக அரசு அறிவிப்பு

விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ₹3,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, வேட்டி, சேலை, முழுக் கரும்பு ஆகிய தொகுப்பு வழங்கப்படவுள்ளன. 97% குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3% பேருக்கும் முறையாக வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.