News April 15, 2025
பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்

பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி(58) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். தனுஷ் நடிப்பில் ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’, ஸ்ரீகாந்த் நடிப்பில் ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பெரியார் திரைப்படத்தில் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். ஸ்டான்லி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 16, 2025
உயிர் போனாலும் கைவிட மாட்டேன்: உத்தவ்

பாஜகவில் இருந்து பிரிந்தாலும், உயிர் போனாலும் இந்துத்துவாவை கைவிட மாட்டேன் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாஜகவின் சிதைந்து வரும் இந்துத்துவாவை தான் ஏற்கவில்லை எனவும், சிவசேனா இல்லாமல், பாஜகவால் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியிருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். INDIA கூட்டணியில் உள்ள காங்., திமுக இந்துத்துவாவை எதிர்த்து வரும் நிலையில், தாக்கரே தொடர்ச்சியாக ஆதரித்து பேசிவருகிறார்.
News April 16, 2025
இந்தியாவில் அறிமுகமான ‘Dio 125’.. விலை தெரியுமா?

ஹோண்டா நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட Dio 125 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2 வேரியண்ட்களில் கிடைக்கும் இதன் விலை ₹96,749 மற்றும் ₹1.02 லட்சமாக (Ex- Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட இது ₹8,798 அதிகமாகும். LCD ஸ்க்ரீனுக்கு பதிலாக 4.2 இன்ச் TFT டிஸ்பிளே, ப்ளூடூத், நேவிகேசன், மொபைல் அழைப்பு, மெசேஜ் அலெர்ட், USB Type C சார்ஜிங் என பல வசதிகளை கொண்டுள்ளது.
News April 16, 2025
ஏப்ரல் 19 ஆசிரியர்களுக்கு விடுமுறை

+1, +2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி புனித வெள்ளியும் ஏப்ரல் 20ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படவுள்ளது. இடையில் 19ஆம் தேதி மட்டும் விடைத்தாள் திருத்தும் பணி இருப்பதால், அன்றும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனை ஏற்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.